தென்கிழக்கு அலகு கேட்கும் அஷ்ரப்: தமிழீழத் துரோகி என்றவர் சேகு இஸ்ஸதீன்...!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் தென்கிழக்கு அலகு பற்றிப் பேசிய காலகட்டத்தில், காரைதீவில் நடந்த ஈ.பி.டி.பி யின் மேதினக் கூட்டத்தில் ‘’தமிழீழத்தின் இதயத்தில் பங்கு கேட்கிறார் அஷ்ரப்’’ எனவும் ‘’பங்கு கேட்கும் அஷ்ரப் தமிழினத்தின் துரோகி’’ எனவும் கூறி தலைவர் அஷ்ரப்பை புலிகளினதும் தமிழ்த் தேசியத்தினதும் எதிரியாகக் காட்டிக் கொடுத்த சேகு இஸ்ஸதீன், இன்று தென்கிழக்கு அலகு பற்றிப் பேசப்போகிறாராம்.

அன்று அஷ்ரப் அவர்கள் தென்கிழக்கு அலகு கோரிய போது, அவரோடு இருந்த தனிப்பட்ட முரண்பாடுகளின் காரணமாக வஞ்சக நோக்கத்தில் அதனை எதிர்த்து, அன்று முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷையைக் காட்டிக்கொடுத்த சேகு இஸ்ஸதீன், இன்று தனது அரசியல் பிழைப்புக்காக அதைப் பற்றிப் பேச முனைவதன் நோக்கத்தை நன்றாக மக்கள் உணர்ந்து கொள்வர்.

அதிகாரத்தை இழந்து மலையில் ஏறியிருந்தாலும், அதன் மீதான தாகமும் ஏக்கமும் சேகு இஸ்ஸதீனிடம் கொஞ்சமும் விட்டுப்போகவில்லை. அதனால்தான், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சமூகம் மகிந்தவை எதிர்த்து நின்ற போதும் சேகு இஸ்ஸதீன் மகிந்த வெல்லுவார் என்று கூறிக் கொண்டு அவருக்காகப் பிரச்சாரத்திலும் ஈடுபட்டார். அதற்காக கைமாறப்பட்ட காசு பற்றி இங்கு கூறத் தேவையில்லை. காசில்லாமல் அவர் குடும்பி ஆடாது என்பதை நாம் கூறித்தான் யாரும் தெரிய வேண்டியதில்லை.

மேலும், தனது மகனையும் (அஷ்ஹூர் சேகு இஸ்ஸதீன்) தனது மருமகன் (மகளின் கணவர் - ஹசன் அலியின் மகன் சப்ரி) போன்றோரை வைத்து கிழக்கின் எழுச்சி என்ற பெயரில் ஒரு நாடகத்தை அரங்கேற்றினார். கிழக்கின் எழுச்சி என்ற நாடகம் கடந்த வாரம் நடந்த அவர்களின் ஊடகவியலாளர் மாநாட்டின் பின்னர் பிசுபிசுத்துப் போகவே, அடுத்ததாகப் புதிய கட்சியொன்றை உருவாக்கப்போவதாகப் புலுடா விட்டார்.

இப்போது, தன்னை சமூக அக்கறையுள்ள மனிதனாகக் காட்டி எதையாவது சாதித்துக் கொள்ளலாம் என்ற நப்பாஷையில், அஷ்ரப்பைக் காட்டிக் கொடுக்க தமிழீழக் கனவுக்கு எதிரானதானது என தான் கையில் எடுத்த தென்கிழக்கு அலகு என்ற ‘’ராம பாணத்தை’’, மீண்டும் தனது அரசியல் பிழைப்புக்காக கையில் எடுத்துள்ளார். 

காலம் மாறலாம். ஆனால், முனாபிக்தனத்தின் காரணமாக அன்று முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷையான தென்கிழக்கு அலகைக் காட்டிக் கொடுத்து, அஷ்ரப்பை தமிழீழக் கனவின் துரோகியாகச் சித்தரித்ததையும், இப்போது அதையே தனது சுயநல அரசியல் இலக்கை அடைந்துகொள்ள கையில் எடுத்திருப்பதையும் மக்கள் அறியாமல் இருப்பார்கள் என்றிருப்பின் அது உங்கள் கண்மூடித்தனம் சேகு இஸ்ஸதீன் அவர்களே!
இப்படிக்கு,
அஷ்ரபின் போராளி,
ஹம்ஷா லத்தீப்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -