வவுனியாவின் அபிவிருத்திக்காக 3000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் வணிக மைச்சர் றிசார்ட் பதியூதீன் தெரிவித்துள்ளார். வவுனியா செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன், நாடாளுமன்ற பிரதிக்குழுக்களின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் உட்பட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், அரச நிறுவனங்களின் தலைவர்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர்.
இதன்போது, அபிவிருத்தி நடவடிக்கைகளில் காணப்படும் பிரச்சினைகள், புதிய அபிவிருத்தித் திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளன. மேலும், வவுனியாவில் பொருளாதார மத்திய நிலையம் ஒன்றை நிர்மாணிப்பது தொடர்பாகவும் இதன் போது கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -