நாடு முழுவதும் அவசரகால நிலையை பிரகடனப்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம்...!

நாடு முழுவதும் அனர்த்த அவசர கால நிலையைப் பிரகடனப்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக சபைத் தலைவரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல நேற்று பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

அனர்த்தத்துக்கு உள்ளாகியுள்ள மக்களுக்கு தேவையான உடனடி உதவிகளை வழங்குவதில் அரச சுற்றுநிருபங்கள் தடையாக காணப்படுகின்றன. அனர்த்த அவசர கால நிலைமையைப் பிரகடனப்படுத்தினால், சுற்று நிருபங்களுக்கு வெளியே சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்குதடையின்றி உதவிகளை வழங்க முடியும்.

இதனால், அரசாங்கம் உடனடியாக அவசர கால நிலைமையைப் பிரகடனப்படுத்த வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் நேற்று பாராளுமன்றத்தில் விடுத்த வேண்டுகோளையடுத்து அமைச்சர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -