தேசிய இராணுவ தின நிகழ்வுகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று (புதன்கிழமை) நாடாளுமன்ற மைதானத்தில் நடைபெற்றது. விடுதலைப் புலிகளுடனான யுத்த வெற்றி மற்றும், அந்த யுத்தத்தில் உயிரிழந்த, காயமடைந்த இராணுவ வீரர்களை நினைவுகூரும் முகமாக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய, முன்னாள் இராணுவத் தளபதியும் அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, முப்படைத் தளபதிகள், அமைச்சர்கள், மற்றும் அரசியல் பிரமுகர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
முப்படையினர் மற்றம் பொலிஸாரின் அணிவகுப்பு இடம்பெற்ற போதிலும், ஆயத தொடரணிகள் எதுவும் இடம்பெறாமல் மிகவும் எளிமையாக இந்த நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது, யுத்தத்தினால் உயிர் நீத்த படையினரை நினைவு கூர்ந்து, இராணுவ நினைவுத் தூபியில் மலர் வளையம் வைத்து அஞ்சலியும் செலுத்தப்பட்டது.


















