இன்று அதிகாலையில் சாய்ந்தமருதில் குண்டுத்தாக்குதல் -படங்கள் இணைப்பு


எம்.வை.அமீர் -

சாய்ந்தமருது 15, லீடர் அஷ்ரப் வித்தியாலயத்தின் பின்னால் உள்ள குவாட்டஸ் ஒழுங்கையில், 870 ஆம் இலக்க வீட்டின் மீது 2016-05-14 ஆம் திகதி அதிகாலை 2.30 மணியளவில் குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அப்துல் சலாம் அஸ்வர் என்பவரின் வீட்டின் மீதே குறித்த குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  சம்பவம் நடப்பதற்கு சற்று முன்னரே குறித்த வீட்டின் சொந்தக்காரரான அஸ்வர் கொழும்பில் இருந்து வீட்டுக்கு வந்துள்ளார்.

வீட்டின் மீது குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்ட சமயத்தில், இவரது தந்தையும் தாயும் உட்பட வீட்டில் அனைவரும் உறங்கிக்கொண்டிருந்துள்ளனர்.

குண்டுத்தாக்குதலின்போது வீட்டின் முன்புறம் உட்புறமும் சேதமடைந்துள்ளதுடன் உள்ளே உறங்கிக்கொண்டிருந்த அவரதது தந்தையும் தாயும் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக கல்முனைப் பொலிசாரும் இராணுவத்தினரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -