எஸ்.என்.எஸ்.றிஸ்லி-
அன்புடீனின் 100 கவிதைகள் எனும் கவிதைத் தொகுப்பு எதிர் வரும் 29.05.2016 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை ஜனாப் யூ.எல்.ஏ.அஸீஸ் தலைமையில் பாலமுனை இப்னுஸீனா வித்தியாலய மண்டபத்தில் காலை09.15 மணிக்கு வெகு விமர்சையாக வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது.
இந்நூல் வெளியீட்டு விழாவிற்கு பிரதம அதிதியாக பேராசிரியர் எம்.ஏ.நூஃமான் மற்றும் கெளரவ அதிதிகளாக பேராசிரியர் றமீஸ் அப்துல்லா, மணிப்புலவர் மருதூர் ஏ மஜீத், கலாநிதி ஏ.எப்.எம்.அஸ்ரஃப் மற்றும் இலக்கிய அதிதியாக சோலைக்கிளி ஆகியோரும் கலந்து கொள்ளும் அதே வேளை நாடு தழுவிய ரீதியில் உள்ள புகழ் பூத்த எழுத்தாளர்கள், கவிஞர்கள், இலக்கியவாதிகள் எனப் பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந் நூலினை பல்கலை நாயகன் உமா வரதராஜன், ஆய்வாளர் ஸிராஜ் மஸ்ஹூர், கவிஞர் ஏ.காதர் ஆகியோர் விமரிசனம் செய்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இந் நூல் வெளியீட்டு விழாவுக்கு இலக்கியவாதிகள், கவிஞர்கள், படைப்பாளிகள் , சுவைஞர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர்.