சுதந்திரக் கட்சியின் மேதின பதாகையில் சந்திரிக்கா, மைத்திரிக்கு அருகில் மகிந்த

ரலாற்று சிறப்புமிக்க காலி கோட்டைக்கு முன்பாக சமன விளையாட்டு மைதானத்தில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மேதினக் கூட்டத்துக்காக மூன்று மேடைகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

கலாசார நிகழ்வுகளுக்காக பாரிய மேடையொன்றும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட அழைக்கப்பட்ட சிறப்பு விருந்தினர்களுக்காக மற்றுமொரு மேடையும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மேடைகளுக்கு அருகில் பாரிய வரவேற்பு பதாகையொன்றும் கட்டப்பட்டுள்ளது. அதில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புகைப்படமும் முன்னாள் ஜனாதிபதிகளின் புகைப்படங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

அதில், ஒன்றிணைந்த எதிரணியின் கொழும்பு, கிருலப்பனை கூட்டத்துக்கு செல்வதாக அறிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புகைப்படமும் உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -