சர்வதேச தொழிலாளர்கள் தினம் இன்று..!

ர்வதேச தொழிலாளர்கள் தினம் இன்றாகும். மே தினம் எனப்படும் உலகத் தொழிலாளர் தினம் ஆண்டுதோறும் மே முதலாம் திகதி உலகளாவிய ரீதியில் கொண்டாடப்பட்டு வருகின்றது.

மே தினத்தின் தொடக்கத்தை இரண்டு முக்கிய புரட்சிகள் அடையாளப்படுத்துகின்றது. 1776ல் அமெரிக்காவின் 13 மாநிலங்களில் வெடித்த தொழிலாளர் புரட்சி.

இப்புரட்சியினையடுத்து சிகாகோ தொழிலாளர் புரட்சி 1885 ல் ஆரம்பமாகி 1886 ல் மே தினமான முதலாம் திகதியில் முடிவுற்றுள்ளது.

எட்டு மணி நேரம் தொடர்பான போராட்டம் 1886 ல் சிகாகோவில் வெற்றியளித்ததோடு மே முதலாம் திகதி சர்வதேச தொழிலாளர் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது.

1886 ம் ஆண்டு மே முதலாம் திகதியில் 88,000 தொழிலாளர்களின் பங்கேற்புடன் “எட்டு மணித்தியாலம்” போராட்டம் ஆரம்பமானது. 307 நிறுவனங்களின் தொழிலாளர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் குதித்திருந்தனர்.

அடக்குமுறை அதிகரித்தது. எனினும் போராட்டம் தொடர்ந்தது. புரட்சி வெடித்து இறுதியில் தொழிலாளர்களின் கோரிக்கை வெற்றிகண்டது. இதனை நினைவு கூறும் விதமாகவே வருடா வருடம் மே தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

உன்னதமாய் உழைக்கும் உழைப்பாளர் உள்ளங்கள் அனைவருக்கும் மேதின வாழ்த்துக்கள்...
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -