உள்ளூராட்சி மன்றங்களை நிர்வாகம் செய்வதற்கு அரசாங்கம் தற்காலிக ஏற்பாடு...!

ள்ளூராட்சி மன்றங்களை நிர்வாகம் செய்வதற்கு அரசாங்கம் தற்காலிக ஏற்பாடுகளைச் செய்ய திட்டமிட்டுள்ளது. தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் நிர்வாகப் பணிகளை உரிய அதிகாரி ஒருவரிடம் ஒப்படைப்பது குறித்து ஜனாதிபதி கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விடயம் குறித்து ஆலோனை நடாத்த ஜனாதிபதி அண்மையில், சட்ட மா அதிபர் திணைக்கள சிரேஸ்ட அதிகாரிகள், உள்ளூராட்சி மன்ற அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளை ஜனாதிபதி செயலகத்திற்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இந்தப் பேச்சுவார்த்தைகளின் போது உள்ளூராட்சி மன்ற அமைச்சு ஒரு நிலைப்பாட்டையும், சட்ட மா அதிபர் திணைக்களம் மற்றுமொரு நிலைப்பாட்டையும் வெளியிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எனினும், இறுதியில் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் நிர்வாகப் பொறுப்பு உரிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்போதைக்கு 235 உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல்கள் ஒத்தி வைக்கப்பட்டு ஆணையாளர்களிடம் நிர்வாகப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. கொழும்பு, மொரட்டுவ, தெஹிவளை கல்கிஸ்ஸ உள்ளிட்ட 11 மாநகரசபைகளின் பதவிக் காலம் எதிர்வரும் ஜூன் மாதம் 11ம் திகதியுடன் பூர்த்தியாகின்றது.

இந்த மாநாகரசபைகளின் பதவிக் காலத்தை நீடிக்காது, உரிய அதிகாரிகளிடம் நிர்வாகப் பொறுப்புக்களை ஒப்படைக்க ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அவசரமாக உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடாத்துவதில்லை எனவும் இந்த பேச்சுவார்த்தையின் போது தீர்மானிக்கப்பட்டது என கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை காலம் தாழ்த்தாது துரித கதியில் நடத்துமாறு மஹிந்த ராஜபக்ச தரப்பினர் கோரி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -