பாதிப்புக்குள்ளாகி அகதிகளான குடும்பங்களுக்கு சிவன் பவுண்டேசன் நிதிவுதவி...!

இக்பால் அலி-
நாட்டின் சீரற்ற கால நிலை மாற்றத்தின்னால் மண்சரிவுக்குள்ளாகி ஆறு உயிர்களை காவு கொண்ட கடுகன்னாவ இலுக்வத்தை ரம்மலக்கப் பகுதியில் மரணம் அடைந்த மற்றும் வீடுகள் பாதிப்புக்குள்ளாகி அகதிகளான முஸ்லிம் குடும்பங்களுக்கு சிவன் பவுண்டேசன் அமைப்பினால் ரம்மலக்க தைக்கா பள்ளிவாசலில் வைத்து நிதிவுதவிகள் 19-05-2016 வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் சிவன் அறக்கட்டளை நிதியத்தின் தலைவரும் டெலோ இயக்கத்தின் கொள்ளை பரப்புச் செயலாளருமான கணேஷ்வரன் வேலாயுதம் நிதி உதவிகளை வழங்கி வைத்தார்.

மரணம் அடைந்த மற்றும் முற்றாக சேதம் அடைந்த குடும்பத்திற்கு 10000.00 ரூபா விகிதமும் மற்றும் 5000 ரூபா என்ற வகையில் நிதி உதவிகள் இங்கு வழங்கி வைக்கப்பட்டன.

இந்த மண்சரிவின் காரணமாக 75 குடும்பங்களை இந்த பகுதியில் வசிக்க முடியாது என வெளியேறும்படி அரசாங்கம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இங்குள்ள மக்கள் வெளியேறி தற்போது உறவினர்கள் மற்றும் தெரிந்தவர்களின் இல்லங்களில் வாழ்ந்து வருகின்றனர். இதில் 350 பேர் அளவில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.





எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -