யாழில் வாள்வெட்டு - பாடசாலை மாணவன் உட்பட நால்வர் படுகாயம்

யாழ்ப்பாணம் தென்மராட்சி – வரணிப் பிரதேசத்தில் இனந்தெரியாத குழுவினால் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டில் பாடசாலை மாணவன் உட்பட நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் நேற்று இரவு 9 மணியளவில் இடம்பெற்றதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

வரணி மத்தியகல்லூரிக்கு அருகிலுள்ள வீதியூடாக குறித்த நால்வரும் பணித்துக்கொண்டிருக்கையில் இடைமறித்த குழு ஒன்று அவர்களை வாள்களால் வெட்டியதுடன் இரும்புக் கம்பிகளாலும் தாங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் படுகாயமடைந்த நால்வரும் நேற்றிரவு 11 மணியவில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், மூவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -