அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் மேதின ஊர்வலம் கல்முனையில்..!

கஜரூபன்-
கில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம் நடத்தும் மேதினக் கூட்டமும், மேதின ஊர்வலமும் கல்முனை மாநகரில் மே முதலாம் திகதி நடைபெறவிருக்கின்றது.

அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம் ஸ்தாபிக்கப்பட்டு 23ஆவது வருடமாக நடத்தப்படவிருக்கும் இந்த மேதின நிகழ்வுகள் சங்கத் தலைவரும், தொழிற்சங்க வாதியுமான எஸ்.லோகநாதன் தலைமையில் நடைபெறும்.பொது ஊழியர் சங்கம் ஏற்பாடு செய்துள்ள குறித்த மே தினக் கூட்டம் கல்முனை வை.எம்.சீ.ஏ. மண்டபத்தில் நடைபெறவிருப்பதுடன், ஆரம்பத்தில் கல்முனை வை.எம்.சி.ஏ. மண்டப முன்றலிலிருந்து, வளைவுச் சந்தி, பிரதான வீதி ஊடாக மேதின ஊர்வலமும் இடம் பெறவுள்ளது.

அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் மேற்படி மேதின நிகழ்வுகளில், திகாமடுல்ல மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் பிரதம அதிதியாகவும், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன், பேராசிரியர் எம்.இராஜேஸ்வரன் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் தொழிற்சங்க வாதியுமான செல்லையா இராசையா, கல்முனை மாநகர சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் ஹென்றி மகேந்திரன், சிரேஷ்ட ஊடகவியலாளர்களான கலாபூஷணம் ஏ.எல்.எம்.சலீம், செல்லையா பேரின்பராசா ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்து கொள்வர்.

மேலும் இந்த மேதின நிகழ்வுகளில் குறிப்பாக வடக்கின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மாவட்டங்களில் இயங்கும் அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்க மாவட்டக்கிளை உறுப்பினர்கள், மாவட்ட, பிரதேச இணைப்பாளர்களும் கலந்து கொள்ளவுள்ளதாக சங்கப் பொதுச் செயலாளர் எம்.எம்.ஏ.வகாப் தெரிவித்தார்.

இதேவேளை நீண்டகாலமாக சங்கம் வலியுறுத்தி வரும் புரையோடிப் போன இனப் பிரச்சினைத் தீர்வுக்கு வடக்கு கிழக்கு இணைந்த மாநில சுயாட்சி வழங்கக் கோரும் தீர்மானம் உட்பட, வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரனைக் கைது செய்ய வேண்டுமெனவும், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனை எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து உடனடியாக பதவி விலக்க வேண்டுமென கடும் போக்கு இன வாத அமைப்புக்களான பொதுபலசேனா, சிங்கள ராவய, ராவணா பலய என்பன விடுத்துள்ள கோரிக்கையை வன்மையாகக் கண்டிக்கும் தீர்மானமும், தமிழ், முஸ்லிம் மக்களின் ஒற்றுமையே அதிகாரப் பகிர்வின் முழுமையைத் தரும் என்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனின் அறைகூவலை வரவேற்கும் தீர்மானமும் மேதினத் தீர்மானங்களாக நிறைவேற்றப்படவுள்ளதுடன், மேலும் பல பொதுத் தீர்மானங்களும், தொழிலாளர்கள் பிரச்சினைகள் தொடர்பான தீர்மானங்களும் மேதினத் தீர்மானங்களாக அன்றைய

நிகழ்வில் நிறைவேற்றப்படவுள்ளதாக சங்கத்தலைவர் லோக நாதன் தெரிவித்தார்.இந்த மேதின நிகழ்வுகளைத் தொடர்ந்து அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தினதும், இணை நிறுவனமான வடக்கு கிழக்கு மாகாண ஜீவோதய நலன் புரி நிறுவனத்தினதும் பொதுக்கூட்டமும் நடைபெறவும் ஏற்பாடுகள் செய்யப்பட் டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -