மயிலை வேட்டையாடிய நபர் தொடர்பில் நேற்று இணைய செய்திகளில் பரவலாக பேசப்பட்டது. இதேவேளை, சந்தேகநபர் தொடர்பில் தகவல்களை வன ஜீவராசிகள் திணைக்களம் பொதுமக்களிடம் கோரியிருந்தது.
இதன்பிரகாரம், குறித்த நபர் தங்கொட்டுவை பிரதேசத்தின் பிரபல வர்த்தகர் ஒருவரின் மருமகன் என்ற விடயம் தெரியவந்துள்ளது.
குறித்த சந்தேகநபர் 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆனமடுவ பிரதேசத்தில் சட்டவிரோத துப்பாக்கியை பயன்படுத்தி மயிலை வேட்டையாடியுள்ளதுடன், அதை புகைப்படம் எடுத்து தனது பேஸ்புக்கில் பதிவேற்றியுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த நபர் இத்தாலியிருந்து வந்தவர் என்பதுடன் குறித்த நபர் தொடர்பான மேலதிக தகவல்களை வன ஜீவராசிகள் திணைக்களம் திரட்டியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. TW