இணையத்தளங்களிலும் முகப் புத்தகத்திலும் தன்னால் பணம் கொடுத்து கூலிக்கமர்த்தி மற்றவர்களுக்கு சேறு பூசும் அமைச்சருக்கும் அவரது அடிவருடிகளான சொந்தப் பெயர்களில் முகப் புத்தகத்தில் சேறு பூசுவதற்கு முதுகெலும்பில்லாத கோழைத்தனமான பிற்போக்கு எழுத்தாளர்களின் கவனத்திற்கு.
நான் உங்கள் அமைச்சருக்கு எதிராக கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக என்னால் லஞ்ச ஊழல் திணைக்களத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் உண்மைத் தன்மை அற்றவை என லஞ்ச ஊழல் திணைக்களம் இதுவரையில் அறிவிக்கவில்லை. அந்தக் குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பித்துக் கொள்ளுவதற்கும் குற்றங்களை மறைப்பதற்கும் நாட்டு மக்களையும் குறிப்பாக முஸ்லிம் சமூகத்தை பிழையாக வழிநடத்துவதற்கும் காலத்துக்கு காலம் எவராவது ஒரு பௌத்த தேரரை தமக்கு எதிராக பேச வைத்து தனக்கு எதிரான குற்றங்களை மழுங்கடித்து தன்னை ஒரு முஸ்லிம் நாயகனாக காட்டிக் கொள்வதற்கு நாடகங்களை அரங்கேற்றும் சிறந்த நடிகரான அமைச்சர் ரிஷாட் பதியுதீன் முன்னால் ஜனாதிபதி அவரது குடும்பத்து அங்கத்தவர்களால் திரைக்கதை வசனம் எழுதப்பட்டு அவர்களால் நடாத்தப்பட்ட நாடகத்தில் ரிஷாட் பதியுதீன் கதாநாயகன் ஆகவும் பொதுபல சேனா, இராவணபலய போன்ற அமைப்புக்கள் வில்லன்களாகவும் முஸ்லிம் சமூகத்தை திசைதிருப்ப அரங்கேற்றப்பட்ட நாடகங்கள் இன்னும் எவ்வளவு காலத்திற்கு ஓடப்போகின்றது என்பதை சற்று பொறுத்திருந்து பார்ப்போம்.
என்னைப்பற்றி அவதூறு எழுதுபவர்கள் உங்கள் உண்மையான பெயர்களில் எழுதும் எழுத்துக்களையும் விமர்சனங்களையும் வரவேற்கிறேன். அதை விடுத்து விலாசமில்லாமல் போலி முகத்தளங்களில் பதிய விடுபவர்களுக்கு கூடிய விரைவில் சைபர் கிரைம் திணைக்களம் மூலமாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு உங்கள் முகத்திரைகள் கிழிக்கப்படும் அப்போது உங்கள் பின்புலம் என்ன என்பது வெளிச்சத்திற்கு வரும்.
அமைச்சர் ரிஷாட் காலத்திற்கு காலம் தன்னால் அமர்த்தப்பட்ட பௌத்த தேரர்களுடன் நேரடி விவாதங்களிலும் தர்க்கங்களிலும் ஈடுபடுவதை விட்டுவிட்டு முடிந்தால் அமைச்சரை ஊழல்வாதி, அகதிகளை வைத்து வியாபாரம் செய்பவர் என கூறும் என்னோடு நேரடி விவாதத்திற்கு வருவதற்கு தயாரா? கூலிப்படைகளை வைத்து சேறு பூசி தனது குறைகளையும்
ஊழல்களையும் மறைப்பதற்கு முயலாமல் ஒரு நேர்மையான உண்மையான அரசியல்வாதியாக இருந்தால் அவர்கூறுவது போன்று அவரது கை கறைபடியாதது என நிரூபிப்பதற்கு என்னோடு அவரால் ஒழுங்குபடுத்தப்படும் எந்த ஒரு ஊடகத்திலும் நேரடி விவாதத்திற்கு வருவதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்துக்கொள்ளுகிறேன்.
ராஸிக்.ஆ.குவைதிர்கான்-
ராஸிக்.ஆ.குவைதிர்கான்-
ஸ்தாபகர் - வடமாகாண முஸ்லிம்கள் அமைப்பு.