யோசித ராஜபக்ஷ பிணையில் விடுதலை...!



நிதிச் சலவை மற்றும் பொது சொத்து துஸ்பிரயோகம் போன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட யோசித ராஜபக்ஷ உட்பட நால்வரும் பிணையில் செல்ல கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

யோசித ராஜபக்ஸ உட்பட நால்வருக்கும், ஒரு லட்சம் ரூபா ரொக்க பிணையிலும், பத்து லட்சம் ரூபா படி இரண்டு சரீர பிணையிலும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் நீதிமன்ற உத்தரவின்றி இவர்களுக்கு வெளிநாட்டுப் பயணம் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மேல் நீதிமன்றத்திற்கு வருகைத் தந்துள்ளார்.

இவர்களில் நிசாந்த ரனதுங்கவிற்கு பிணை வழங்கப்படவில்லை. இதற்குக் காரணம் அவர் தனது பிணைமனுவை தனியாக தாக்கல் செய்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. இதன் போது நிசாந்த ரனதுங்கவின் மனைவியும் மேல் நீதிமன்றத்திற்கு வருகைத் தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -