மின்சாரத் தடைக்கான பொறுப்பினை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டுமென ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் கணக்கில் நாமல் ராஜபக்ச இது பற்றி பதிவொன்றை இட்டுள்ளார்.
இலங்கை வரலாற்றில் இவ்வாறு மின்சாரம் தடைப்பட்டதில்லை. கடந்த அரசாங்கத்தை குறைகூறி குறைகூறி இந்தப் பிரச்சினைகள் அனைத்திலிருந்தும் தப்பித்துக் கொள்ள முடியாது.
அரசாங்கத்தின் திறமையற்ற மற்றும் மோசமான நிர்வாகத்தினால் இவ்வாறு மின்சாரத் தடை ஏற்படுகின்றது என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
