மலேசியாவின் அபிவிருத்தி நுணுக்கங்களை பகிர்ந்துகொள்ளும் முகா குழு



எம்.வை.அமீர்,ஹைதர் அலி-

குறுகிய காலத்துக்குள் அபிவிருத்தியடைந்துள்ள மலேசியாவின் அபிவிருத்தி நுணுக்கங்களையும் அனுபவங்களையும் பகிர்ந்துகொள்வதற்காக அங்கு சென்றுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தூதுக்குழுவினர் அவர்களது பயணத்தின் இரண்டாம் நாள் நிகழ்வாக

அந்நாட்டின் தேசிய ஒருங்கிணைப்புக்கான அமைச்சர் "தான் சிறி தாதுக் சேரி ஜோஷப் குருப் " அவர்களை பிரதமரின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் சந்தித்ததுடன் , மலேசியயாவின் தேசிய ஒருன்கினைப்பு தொடர்பான பொறிமுறைகள் பற்றி கலந்துரையாடியலும் ஈடுபட்டனர்.

இந்நிகழ்வில் அமைச்சின் நிறைவேற்று பணிப்பாளர் " ஜாந்திசன் லட்சுமணன் , உட்பட UMNO கட்சியின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர் .

மு கா சார்பில் இந்நிகழ்வில் மாகாண சபை உறுப்பினர்களான ஆரிப் சம்சுதீன் , சிப்லி பாரூக் , ரிஸ்வி ஜவகர்ஷா .மற்றும் ஷிபான் மஹருப், இப்ரா லெப்பை சாஹிர் உட்பட முகாவின் ஏனைய தூ துக்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தூதுக்குழுவினர் பல்வேறுபட்ட பயிற்சி மற்றும் கள பயணங்களிலும் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -