அய்ஷத் ஸெய்னி-
பாலமுனையில் எதிர்வரும் 19 ம் திகதி இடம்பெறவுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 19 வது தேசிய மகா நாட்டை முன்னிட்டு கட்சியின் பாரளுமன்ற உறுப்பினர்கள், மாகண சபை உறுப்பினர்கள், உயர்பீட உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் பங்கு கொள்ளும் மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டி எதிர்வரும் 13ம் திகதி காலை 8.30 மணியளவில் பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் இடம் பெறவுள்ளது.
கட்சியின் தேசிய தலைவரும் நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ள இந் நிகழ்வில் கட்சிக்காக உயிர்த் தியாகம் செய்த எட்டு தியாகிகளின் பெயரை சுமந்த எட்டு அணிகள் களமிறங்கவுள்ளது.
கட்சியின் பிரதித் தலைவரும் விளையாட்டுத் துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களின் ஆலோசனையில் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னால் தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸில் அவர்களின் நெறிப்படுத்தலில் முன்னால் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உறுப்பினர் உவைஸ் தலைமையிலான குழுவினர் இச் சுற்றுப் போட்டிகளுக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
