இலங்கையின் நாடாளுமன்றில் 95 வீதமானவர்கள் கொலஸ்ட்ரால் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. 29 வயதுடைய இளைஞர் பணியாளர்கள் உட்பட கொலஸ்ட்ரால் நோய் 295 என்ற அளவிற்கும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று முன்தினம் 02-03-2016 நாடாளுமன்ற பணியாளர்களுக்காக மேற்கொள்ளப்பட்ட இலவச மருத்துவ முகாமின் போதே இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடாளுமன்ற பணியாளர்கள் அனைவருக்கும் 17,000 பெறுதியான வைத்திய பரிசோதனைகள் இலவசமாக பெற்று கொள்ளும் வாய்ப்பு நேற்று முன்தினம் கிடைத்துள்ளது.
சுகாதார கல்விப் பணியக பணிப்பாளர், வைத்தியர் அமல் ஹர்ஷ டி சில்வா உட்பட விசேட வைத்தியர்கள் முதன்மையான மருத்துவ மையத்தின் வைத்தியர்களினால் மேற்கொள்ளப்பட வைத்திய பரிசோதனைகளின் போதே இந்த ஆபத்தான நிலைமை வெளியாகியுள்ளது.
நாடாளுமன்ற பணியாளர்களில் நூற்றுக்கு 95 வீதமானோர், நாடாளுமன்ற உணவு விடுதியில் உணவு பெற்றுகொள்கின்றமையினாலே கொலஸ்ட்ரால் அதிகரிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
நாடாளுமன்ற உணவு விடுதியில் உணவுகள் ஐந்து நட்சத்திர விடுதியின் உணவுக்கு சமமானவைகள் என்பதனாலும், இலவசமாக கிடைப்பதனாலும் அனைத்து பணியாளர்களும் அங்கு தான் உணவு பெற்றுகொள்கின்றனர்.
உணவு நட்சத்திர விடுதிக்கு சமமானதாக இருந்த போதிலும் சுகாதாரத்திற்கு ஆரோக்கியமானதல்ல என தெரியவந்துள்ளது.
சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தலைமைத்துவத்தில் இந்த மருத்துவ முகாம் இடம்பெற்றுள்ளது
