காதலித்து ஏமாற்றிய இளைஞனுக்கு 7 வருட கடூழிய சிறைதண்டனை..!

திருமணம் செய்வதாகக் கூறி காதலித்து யுவதி ஒருவரை ஏமாற்றிய இளைஞருக்கு 2 வருடங்களுக்கு ஒத்திவைத்த 7 வருட கடூழியச் சிறைத் தண்டனை விதித்ததுடன் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஒரு இலட்சம் ரூபா நட்டஈடு வழங்கவும் உத்தரவிட்டார் சாவகச்சேரி நீதிவான் நீதிமன்ற நீதிபதி திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரன்.

கடந்த 2015 ஆம் ஆண்டு தென்மராட்சி வரணி, இடைக்குறிச்சியை சேர்ந்த யுவதி ஒருவரை கரம்பை குறிச்சியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் திருமணம் செய்வதாகக் கூறி காதலித்து ஏமாற்றினார். இது குறித்து கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் முறைப்பாடு செய்தார்.

இதையடுத்து குறித்த இளைஞரை கைது செய்த பொலிஸார் அவருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்தனர். சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்று வந்த இந்த வழக்கின் குற்றப்பத்திரம் நேற்று வாசிக்கப்பட்டபோது சந்தேகநபரான இளைஞர் குற்றத்தை ஏற்றுக் கொண்டார்.

இதையடுத்து நீதிவான் தீர்ப்பை வாசித்தார். அதில் குற்றவாளிக்கு இரு வருடங்களுக்கு ஒத்தி வைத்த 7 வருட கடூழிய சிறையும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஒரு இலட்சம் ரூபா நட்டஈடும் வழங்க உத்தரவிட்டார். மேலும் குற்றவாளியின் கைவிரல் அடையாளங்களை பதிவு செய்யுமாறு நீதிமன்ற பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -