நள்ளிரவில் மேக் அப் போட்டு திருடும் கில்லாடி திருடன்...!

மிழகத்தில் திருட வந்த நபர் நள்ளிரவில் மேக் அப் போடுவது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளன.

சேலத்தின் ஓமலூர் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த அருண்குமார் என்பவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தனது இருசக்கர வாகனம் திருடு போனதாக புகார் கொடுத்தார்.

இதேபோன்று சேலம் கன்னங்குறிச்சி கோவிந்தசாமி காலனி பகுதியை சேர்ந்த கணேசன் மகன் கார்த்திக் என்பவரும், ஓமலூர் பகுதியில் ஏராளமான இரு சக்கர வாகனங்கள் திருடு போனதாக பலர் புகார் தெரிவித்திருந்தனர்.

இதனையடுத்து பொலிசார் தீவிர விசாரணை நடத்தியதில், கடந்த 13ம் திகதி கடை வீதிக்கு வந்த திருடன் நள்ளிரவில் மேக் அப் போடும் காட்சிகள் பதிவாகி இருந்தன.

இதனை கொண்டு திருடனை அடையாளம் கண்ட பொலிசார், ஓமலூர் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு வெளியே வந்த தர்மபுரி மாவட்டம் தொப்பூரைச்சேர்ந்த பெரியசாமி என்பதை கண்டுபிடித்தனர்.

தொடர்ந்து உறவினர்கள் வீட்டில் பதுங்கி இருந்த பெரியசாமியை கைது செய்தனர், அவரிடம் விசாரித்ததில் அந்த நபர் பழைய குற்றவாளி என்பதும் ஓமலூர், சேலம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 8 இருசக்கர வாகனங்களை திருடியதை ஒப்புக் கொண்டான்.

மேலும் விசாரித்ததில், விலையுயர்ந்த வாகனங்களை திருடி அடமானம் வைத்து, அதில் வரும் பணத்தில் குடித்தும், பெண்களுடன் உல்லாசம் அனுபவித்ததும் தெரியவந்தது.

மீண்டும் பணம் தீர்ந்த பின் அடுத்த வண்டியை திருடுவதை வாடிக்கையாக வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து அடமானம் வைத்த வண்டியை பறிமுதல் செய்ததுடன், பெரியசாமியை சிறையில் அடைத்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -