யாழ் மாநாகரசபை சுகாதார பிரிவு ஊழியர்கள் நிரந்தர நியமனம் கோரி வேலை நிறுத்தம்...!

பாறுக் ஷிஹான்-
யாழ். மாநகர சபையில் சுகாதார பிரிவுவில் தற்காலிகமாக கடமையாற்றி வந்த ஊழியர்கள் தமக்கு நிரந்தர நியமனம் வழங்க வேண்டும் என கோரி ஒட்டுமொத்தமாக (03-03-2016) இன்று காலை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும் இவர்கள் விடயத்தில் தெரியவருவது ....

கடந்த ஆறு ஏழு வருடங்களாக சுகாதார பிரிவில் தற்காலிய தொழிலாளர்களாக வேலை செய்து வருவதாகவும் தமக்கு நிரந்தர நியமனம் பெற்று தருவதாக கூறிய அனேக ஆணையாளர்களால் தாம் ஏமாற்றப்பட்டும் தமது விடயத்தில் அக்கறையற்றவராக இருக்கின்றார்கள் எனவும் யாழ் மாநாகர சபைக்குள் என்ன தற்போது நடைபெற்றுவருகின்றது என்பதும் தமக்கு புரியவில்லை தமது குடும்பங்கள் இந்ததொழிலை நம்பித்தான் வாழ்ந்துவருவதாகவும் அடிக்கடி வேலையால் நிறுத்துவதால் தமது குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதை சுட்டிகாட்டியிருந்தனர்.

தமது குடும்பங்களின் நிலைமைகளை புரிந்து கொண்டு உரிய அதிகாரிகள் தமக்கு விடயத்தில் மேல் அதிகாரிகளுக்கு கொண்டு சென்று எப்படியாவது பெற்றுத்தருவார்கள் என்ற நம்பிக்கையோடு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் நிரந்தர நியமனம் கிடைக்கும் பட்சத்தில் வேலை நிறுத்தத்தை கைவிடுவோம் என வேலை நிறுத்ததில் ஈடுபட்டவர்கள் தெரிவித்திருந்தனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -