இக்பால் அலி-
அஸ்கரிய பீடத்தின் மநாயக்கர் கலகம ஸ்ரீ அத்ததஸ்ஸி தேரரின் இறுதியை கிரியையான தினத்தில் கண்டி நகர் பள்ளிவாசல்களின் சம்மேளனம் மற்றும் அக்குரணை பதுர்தீன் ஜம்ஆப் பள்ளிவாசல் இணைந்து 10000 தண்ணீர் போத்தல்கள் இன்று கையளிக்கப்பட்டது.
முகா நாயக்க தேரரது இறுதி கிரியைகள் இன்று 2.30 மணி அளவில் கண்டி அஸ்கிரிய விளையாட்டு iதானத்தில் பூரண அரச மரியாதையுடன் இடம்பெற்றது.
இந்த தண்ணீர்ப் போத்தல்கள் யாவும் கண்டி மீராமக்கம் பள்ளியிலிருந்து அஸ்கிரியவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு கையளிக்கப்பட்டது. அரவது பூதவுடலையும் கண்டி முஸ்லிம் மக்களின் பிரதிநிதியாகச் சென்று பார்வையிட்டனர்
கண்டி நகர் பள்ளிவாசல்களின் சம்மேளனத்தின் தலைவர் அல்ஹாஜ் கே. ஆர். ஏ. சித்தீக் தலைமையில் சென்ற குழுவில்அக்குரணை பதுர்தீன் ஜம்ஆப் பள்ளிவாசலின் தலைவர் எஸ். எச். ஏ. ரம்சீன், கண்டி முஸ்லிம் வர்த்தக சங்கச் செயலாளர், பள்ளிவாசல்களின் இமாம்கள் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.






