ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல் போகச்செய்யப்பட்டமை தொடர்பில் முன்னாள் அரசாங்கத்தின் உயர் பாதுகாப்பு அதிகாரி உடனடியாக கைதுசெய்யப்படும் சந்தர்ப்பத்தை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆங்கில செய்தித்தாள் ஒன்று இந்த செய்தியை இன்று வெளியிட்டுள்ளது.ஏற்கனவே இந்த குற்றச்சாட்டு தொடர்பில் பல இராணுவ புலனாய்வு அதிகாரிகளும் வீரர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராணுவ பரிசோதகர் நிலை அதிகாரி ஒருவரும் இந்த சம்பவம் தொடர்பில் கடந்த புதன்கிழமை கைதுசெய்யப்பட்டார்.இந்தநிலையில், இரண்டு இராணுவ கேர்ணல்கள், முக்கிய பல விடயங்களை தமது விசாரணைகளின் போது வெளிப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரகீத்தை தடுத்து வைக்குமாறு உத்தரவிட்டது யார் என்ற தகவலையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.இந்தநிலையில், குறித்த விசா ரணைகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாக சீ.ஐ.டி தரப்பு தெரிவித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -