வடக்கு கிழக்கு முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள் ஒன்றியம் அமைக்கப்படவேண்டும் - சேகு இஸ்ஸத்தீன்

சப்றின்-

வடக்கு கிழக்கு முஸ்லிம் பாராளுமன்றஉறுப்பினர்களின் ஒன்றியத்தை வழிநடாத்திச் செல்ல வடக்கு கிழக்கின் மாகாணசபைகளின் முஸ்லிம் உறுப்பினர்களினதும், வடக்கு கிழக்கின் உள்ளூராட்சிமன்றங்களின் முஸ்லிம் உறுப்பினர்களினதும் ஒன்றிணைந்த ஒன்றியமும் உருவாக்கப்பட்டு வடக்கு கிழக்கை மொத்தமாக பாராளுமன்றம், மாகாணசபைகள், உள்ளூராட்சிமன்றங்களில் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசுக்கு ஆதரவான சகல மக்கள், பிரதிநிதிகளின் ஒன்றியம் உருவாக்கப்பட்டு அதனூடாக புதிய அரசியலமைப்புக்கான முஸ்லிம்களின் அபிலாசைகளைப் பிரதிபலிக்கும் ஆலோசனைகள் முன்வைக்கப்படவேண்டும் என்று முன்னாள் அமைச்சரும் வடக்கு கிழக்கு முஸ்லிம் தேசியவாதிகள் முன்னணி தலைவருமான சட்டத்தரணி எம்.எச். சேகு இஸ்ஸத்தீன் கூறினார்.

அக்கரைப்பற்றில் நேற்று முன்தினமிரவு (20.02.2016) இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்படி கூறினார்.


அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில் - அமைச்சர் ஹலீம், அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆகியோரோடு இணைந்து தாமும் ஒரு கூட்டமைப்பை உருவாக்க தயாராக இருப்பதான அமைச்சர் றிஷாத் பதியூத்தீனின் அறிக்கையில் எல்லோரரும் இணைந்து தீர்வுதிட்டத்திற்கான ஆலோசனைகளை வைக்கப்போவதான எண்ணம் பாராட்டப்பட வேண்டியதுதான்.

எனினும்,வடகிழக்கை தாயகமாகக் கொள்ளாதவர்களின் செல்வாக்கு,ஆலோசனைகளை தவறானவழியில் திசைதிருப்பிவிடக்கூடும் என்பது அனுபவரீதியான அச்சத்திலுள்ளதாகும்.

மேலும்,உண்மையான ஒருபலம் பொருந்திய தேசிய அரசாங்கம் முற்று முழுக்க பெரும்பான்மையான மக்களின் நம்பிக்கையைப் பெற்றிருக்கும் போது பொதுமக்களிடம் புதிய அரசியலமைப்புக்கான ஆலோசனைகளைக் கேட்டுப் போவதற்கு முன்னர் தனது எண்ணத்தில் இருந்த சீர்திருத்தங்களை உள்ளடக்கியதான ஒருநகல் மசோதாவை முன்வைத்து பொதுமக்களிடம் அபிப்பிராயம் தேடியிருக்கவேண்டும். இது குதிரைக்கு முன் வண்டியைக் கட்டி வெள்ளோட்டம் பார்க்கும் முயற்சிபோலுள்ளது. 

எது எவ்வாறாயிருப்பினும் முஸ்லிம்களின் அபிலாசைகளை பிரதிபலிக்கும் ஓர் தீர்வுதிட்டத்தினை உள்ளடக்கிய புதிய அரசியலமைப்பை உருவாக்க முஸ்லிம் தரப்பில் இருந்து வடக்கு கிழக்கு முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள் ஒன்றியம் அமைத்து உடனடியாக இயங்கச் செய்வது மிகுந்த அவசரமும் அவசியமுமான தேவைப்பாடாகும்.

ஆனால், பூனைக்கு மணிகட்டப்போகும் போது சொந்த நலன்களும் தூர நோக்கற்ற கட்சி நலன்களும் முக்கியத்துவப்படுத்தப்பட்டு மொத்தத்தில் முஸ்லிம்கள் தூக்கியெறியப்படப் போவதை இருந்துதான் பார்க்கவேண்டும்.

வடக்கு கிழக்கு முஸ்லிம் சமூகத்தின் தனித்துவ இன அடையாளத்தை,அங்கீகாரத்தை,அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த எல்லோருமாய்ச் சேர்ந்து இந்த ஒன்றியத்தை உருவாக்கி செயற்படுத்த ஓர்மம் பூணவேண்டும். 

மேலதிகமாக வடக்கு கிழக்கைச் சார்ந்த முஸ்லிம் புத்திஜீவிகளின் காத்திரமான பங்களிப்பைப் பெற்றுக்கொள்ள வடக்கு கிழக்கு முஸ்லிம் புத்திஜீவிகள் ஒன்றியம் ஒன்றும் ஏற்படுத்தப்பட்டு சுதந்திரமாக செயற்படவேண்டும். இவைகள் தவறும் பட்சத்தில் முஸ்லிம்களின் தீர்வு விவகாரம் ஆண்டிகள் கூடி மடம் கட்டியகதைபோலவே நீடிக்கும் என்றும் கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -