திருகோணமலை ஜமாலியா மீனவர் சங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க கடற்கரை பகுதிக்கு மின் இணைப்புடனான விளக்குகள் ரூபா 120,000 ம் பெறுமதி செலவில் கௌரவ கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வரின் 2015 ம் ஆண்டுக்கான மாகாண சபை நிதி ஒதுக்கீட்டில் இருந்து ஒதுக்கபட்டதுடன் அவற்றை இன்று 21.02.2016 ம் திகதி பி.ப. 5.00 மணிக்கு குறித்த பகுதிக்கு விஜயம் மேற்கொண்டு வைபவரீதியாக திறந்து வைத்தார் குறித்த நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் முன்னால் பட்டினமும் சூழலும் நகர சபை உறுப்பினர் நூர் முஹமத்,ஆசிரியர் மக்ஸூம் .ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மூத்த போராளி ஹசன்,முத்தலிப் திருமலை மத்திய கிளையின் தலைவர் ஆசிரியர் பரித் நவ்பல் மீனவசங்க தலைவர் பசீர் நியாஸ் போன்றோர் கலந்துகொண்டனர்.
Home
/
LATEST NEWS
/
திருகோணமலை
/
ரூபா 120,000 செலவில் மின் இணைப்பு வழங்கிவைத்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வர்







