அமைச்சர் றிசாட் பதியுதீன் முசலிப் பிரதேசத்திற்கு சூறாவளிச் சுற்றுப் பயணம்

முசலியூர்.கே.சி.எம்.அஸ்ஹர்-

வர்த்தக கைத்தொழில் அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசிய தலைவருமான றிசாட் பதியுதீன் அவர்கள் தலைமையிலான குழுவில் மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன், இணைப்பாளர் அலிக்கான் சரிப், முந்நாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் இப்பயணத்தில் இணைந்து கொண்டனர். மன்னார் மாவட்டத்தில் தனித்துவமான காலனிலையையும் பொருளாதாரத்தையும் கொண்ட முஸ்லிம்களைப் பெரும் பாண்மையாகக் கொண்ட பிரதேச சபையைக் கொண்ட மொரோக்கோ யாத்திரீகர் இப்னு பதூதா வந்து சென்ற பிரதேசமே இதுவாகும்.

இரவு பகல் பாராது முசலிப் பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஒவ்வொரு கிராமத்திற்கும் அவர் விஜயம் செய்து மக்களின் சுக துக்கங்களை விசாரித்ததுடன், வீதிகள், பள்ளிவாயல்கள், பாடசாலைக்கட்டிடங்கள் போன்றவற்றை திறந்து வைத்ததுடன் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கான ஆரம்ப நடவடிக்கைகளையும் தொடங்கிவைத்தார்.

அமைச்சருக்கெதிரான இனவாத சக்திகளின் தாக்குதலுக்குக் காரணமான மறிச்சுக்கட்டி வில்பத்து பிரச்சினையால் அமைச்சர் இம்மக்களுக்காக நீதிமன்றம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. முசலிப்பிரதேச மக்களுக்கு அரச காணிகளை வழங்க அமைச்சர் நடவடிக்கை எடுத்தாரே தவிர தனெக்கென எவ்வித காணியையும் அவர் பெறவில்லை.

பெளத்தர்களே வாழ்ந்து இராத இப்பகுதியில் பெளத்த சின்னங்களை அமைச்சர் அழித்ததாகவும், பெரும் வாழைத்தோட்டம் வைத்திருப்பதாகவும், அரேபிய குடியேற்றம் அமைக்கப்படுவதாகவும் பேரினவாத இனவாதிகள் குற்றம் சுமத்தினர்.இவை யாவும் பொய்யானவை என்பது பின்னர் நிஜமானது.

முசலிப்பிரதேச மக்களுக்கு அபிவிருத்தியாக இருக்கலாம் அல்லது தொழில் வாய்ப்பாக இருக்கலாம் அல்லது காணிகளாக இருக்கலாம் அல்லது வீடமைப்பாக இருக்கலாம். எதுவாக இருந்தாலும் பிரதேச மக்கள் அமைச்சர் றிசாட் பதியுதீன் அவர்களை பலப்படுத்துவதிலே யாவும் தங்கியுள்ளது.

வன்னி முஸ்லிம் அரசியல் சரித்திரத்தில் அமைச்சர் றிசாட் பதியுதீன் போல் அதிக சேவையைச் செய்ததுடன் சமூகக்காவலனாக நின்று சரித்திரம் படைத்தவர் வேறு யாரும் இல்லை.

வேப்பங்குளம், பிச்சைவாணிபன் குளம்,பொற்கேணி, பண்டாரவெளி, அகத்திமுறிப்பு, மருதமடு, கூளாங்குளம், புதுவெளி, முசலி, கொண்டச்சி, கரடிக்குழி, மறிச்சுக்கட்டி, பாலைக்குழி, முள்ளிக்குளம், அரிப்பு போன்ற அனைத்து முஸ்லிம் தமிழ்க்கிராமங்களுக்கும் விஜயம் செய்து அபிவிருத்தி நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளார்.

பள்ளி பரிபாலன சபையினர், கிராம அபிவிருத்தி சங்கத்தினர். இளைஞர் கழகங்கள் போன்றோர் தமது பிரதேச மக்களின் தேவைகள் குறித்த மகஜர் வழங்கியதையும் காணக்கூடியதாக இருந்தது.

முசலிக்கிராமத்தின் உள்ளக வீதி அபிவிருத்தி, பள்ளிவாயல் கட்டிட நிர்மானம், மீளக்குடியேற ஆர்வமாக உள்ள மக்களுக்கான வீடுகள், மையவாடிக் காணிகளின் விருத்தி போன்ற கோரிக்கைகள் முசலி மக்களால் முன்வைக்கப்பட்டதை அறிய முடிகிறது. இதனை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் வாக்குறுதி அளித்தார்.

இவ்விஜயத்தில் வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அவர்கள் இளைஞர் கழகங்கள், பொலிசார், சிறுவர் கழகங்கள் போன்றவற்றிற்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கியதையும் அறிய முடிகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -