இலங்கையில் நல்லாட்சி அரசாங்கத்துக்கு பின்னர் வெளியக சக்திகள் இருந்து செயற்படுவதாக சந்தேகம் எழுகின்றது. இதன் அடிப்படையிலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை கொலை செய்ய முயன்ற விடுதலைப்புலிகளை கூட விடுதலை செய்ய அரசாங்கம் துணிந்துள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்தநிலையில் நாட்டை விடுவித்த படையினரை அரசாங்கம் வேறுவிதமாக நடத்துவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆங்கில செய்தித்தாள் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அபிவிருத்தியை நோக்காகக் கொண்டே மக்கள் அரசாங்கத்துக்கு வாக்களித்தனர்.
எனினும் இன்று அபிவிருத்திகள் தேக்கநிலையை அடைந்துள்ளன. இதனை மறைப்பதற்காகவே அரசாங்கம் அரசியல் பழிவாங்கல்களை முன்னெடுத்து வருவதாக நாமல் ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
இதேவேளை அரசியலில் தமக்கும் சித்தப்பா பசில் ராஜபக்சவுக்கும் முரண்பாடுகள் உள்ளபோதும் தமக்குள் வேறு பிரச்சினைகள் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்
