பட்டப்பின் பரீட்சை பிற்போடப்பட்டுள்ளது..!

அப்துல் கபூர் ஆதம்-
லங்கை திறந்த பல்கலைக்கழகம் நடாத்தும் பட்டபின் படிப்பிற்கான (PGDE) கல்வி அளவீடுகளும் மதிப்பீடுகளும் எனும் பாடத்திற்கான இறுதிப் பரிட்சை கடந்த ஞாயிற்றுக் கிழமை (2106.01.24) காலை 9.30 மணி தொடக்கம் நண்பகல் 12.30 மணி வரை நாடளவிய நடைபெறுவதற்கான பரிட்சை அனுமதி அட்டைகளும் பரிட்சாத்திகளுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.

ஆனால் அண்மையில் பல்கலைக்கழக நிர்வாகத்தினருக்கும் மாணவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக குறிப்பிட்ட பரிட்சை அன்றைய தினம் நடைபெறவில்லை. இதனால் பரீட்சை எழுதுவதற்கு தயாரான மாணவர்கள் மீண்டும் எப்பொழுது பரிட்சை நடைபெறும் என்று தெரியாமல் அங்கலாய்க்கின்றனர்.

பரிட்சை மீண்டும் மீண்டும் பிற்போடப்படுவதால் மாணவர்களினது பெறுபேற்றினை வெளியிடுவதில் தாமதம் ஏற்படுகின்றது. இதனால் பட்ட மேற் கல்வி டிப்ளோமா பரிட்சை எழுதிய மாணவர்கள் தங்களது Effective Date பின்தள்ளிச் செல்வதாக மிகவும் கவலையோடு தெரிவித்தனர்.

அதிபர் தரம் 3 ஆட்சேர்ப்பு போட்டி பரிட்சைக்காக கடந்த வருடம் நவம்பர் 21 ம் திகதி இப்பரிட்சை முதல் தடவையாக ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

எனவே இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் இது விடயத்தில் மாணவர்களின் பரிட்சை எத்தினத்தில் மீண்டும் நடைபெறும் திகதியினை உடனடியாக ஊடகங்கள் வாயிவாக அல்லது பரிட்சை அனுமதி அட்டை வழங்குவதினூடாக உறுதிப்படுத்துமாறு பரிட்சாத்திகள் வேண்டி நிற்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -