குற்றம் நிரூபிக்கப்பட்டால் குடும்ப சொத்துக்கள் அனைத்தும் அரசுடமையாக்கப்படும்..?

யோஷித்த ராஜபக்ச உள்ளிட்ட சிலர் மீது சுமத்தப்பட்டுள்ள கறுப்பு பண குற்றச்சாட்டு மேல் நீதிமன்றத்தில் நடத்தப்படும் வழக்கு விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டால், அவர்களின் குடும்ப சொத்துக்கள் அனைத்தும் அரசுடமையாக்கப்படும் என தெரியவருகிறது.

பண சலவை சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, அந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், குற்றவாளிகளுக்கு இந்த தண்டனை விதிக்கப்படும்.

யோஷித்த ராஜபக்சவுக்கு அவரது குடும்பத்தினர் சொத்தை இன்னும் பிரித்து கொடுக்காத நிலையிலும் அவருக்கு திருமணமாகாத நிலையிலும் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக சட்டத்துறை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

அதேவேளை தற்போது விசாரணைகள் நடத்தப்பட்டு வரும் ஷிராந்தி ராஜபக்ச நடத்தி வந்த சிரிலிய சவிய என்ற அரசசார்பற்ற நிறுவனத்திற்கு எப்படி பணம் கிடைத்தது என்ற பல சந்தேகமான நிலைமைகள் காணப்படுவதாக தெரியவந்துள்ளது.

சீ.எஸ்.என் தொலைக்காட்சி மற்றும் சிரிலிய சவிய அமைப்பு ஆகியவற்றிற்கு வெளிநாடுகளில் இருந்து பெருந்தொகைப் பணம் கிடைத்துள்ளது.

அந்த பணத்தை வேறு நாடுகளில் வைப்புச் செய்து, அந்த பணத்தை இலங்கையில் நடத்தப்படும் திட்டங்களுக்காக அனுப்பி வைத்ததன் மூலம் வெள்ளை பணமாக மாற்ற முயற்சித்துள்ளமை தெளிவாகியுள்ளது.

பண சலவை தடுப்புச் சட்டத்தின் மூன்றாவது பந்திக்கு அமைய இந்த குற்றச்சாட்டை எதிர்நோக்கும் நபருக்கு 5 முதல் 20 வருடகாலம் வரை சிறைத்தண்டனையை வழங்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது.

மேலும் மோசடி செய்யப்பட்ட பணத்தை விட மூன்று மடங்கு பணத்தை அவர்களிடம் இருந்து அபராதமாக பெற முடியும் என்பதுடன் நபர்களின் சொத்துக்களையும் அரசுடமையாக்க முடியும் என அந்த பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -