ஜோதிடத்தை நம்பி கடலில் குதித்த மகிந்த - இணையத்தில் பரவும் புகைப்படங்கள் , வீடியோ

ஜோதிடத்தை நம்பி ஆட்சியை இழந்த மகிந்த ராஜபக்ச மீண்டும் பதவியேற பல்வேறு பகீரத பிரயத்தனப்பட்டுக் கொண்டிருக்கின்றார் என அடிக்கடி புகைப்பட ஆதாரங்களோடு செய்திகள் வௌவந்து கொண்டிருக்கின்றன.

இதன் பொருட்டு இழந்து போன தனது அதிகாரத்தை மீண்டும் பெற்றுக் கொள்வதற்காக தலைகீழாய் தவமிருப்பது போன்ற முயற்சிகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளார். அது தொடர்பான புகைப்படங்கள் முன்னர் வெளியாகியிருந்தன.

இந்நிலையில், சோதிட சாஸ்திரப்படி தனக்கு தோஷம் ஏற்பட்டிருப்பதன் காரணமாகவே அதிகாரம் தன் கையை விட்டுப் பறிபோயுள்ளதாக மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் நம்பிக் கொண்டிருக்கின்றார்.

இதன் காரணமாக சோதிட ரீதியான பரிகாரங்களும், தோஷ நிவர்த்திகளிலும் கடுமையாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார். சிலவேளைகளில் அவரது கௌரவத்துக்கு இழுக்கு ஏற்படும் முயற்சிகளிலும் ஈடுபடத் தொடங்கியுள்ளார்.

இதன் ஒரு கட்டமாக சோதிடர் ஒருவரின் ஆலோசனைப்படி அண்மையில் தங்காலை கடற்கரையில் மல்லாக்க மிதந்தபடி குளித்து தோசம் நிவர்த்திக்க முயன்றுள்ளார்.

அது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தளங்களில் வேகமாகப் பரவி மஹிந்தவின் அதிகார மோகம் குறித்து கேலி செய்ய வழிசெய்துள்ளது.

இது குறித்து இணையத்தளம் ஒன்று இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

கடலில் நீராடிய மஹிந்த ராஜபக்ஷ – பின்னணி என்னவோ..? என ஊடகவியலாளர்கள் வினா எழுப்பியுள்ளனர் காரணம் நடைப் பயிற்சிக்காக வீதிகள் கடற்கரை வழியாக நடக்கும் பழக்கம் கொண்டுள்ள மகிந்த மன அமைதி தேடி தியானங்களிலும் ஈடுபட ஆரம்பித்துள்ளாராம்.

கடந்த வருடம் ஜனவரி மாதம் எட்டாம் திகதியுடன் பாரிய மன அழுத்தத்திற்கு உள்ளான மகிந்த தற்போது மன அழுத்த நோய் அதிகரித்துள்ளதுடன் உள ரீதியாக பல்வேறு நோய்த் தாக்கத்திற்குள் உள்ளாகியுள்ளதாக கூறும் கொழும்பின் மனநல மருத்துவர்,

கடலில் நீடாடுவது மகிந்தவிற்கு உயிராபத்து என ஜோதிடர் கூறியும் அவற்றையும் கருத்தில் எடுக்காது நீடாடியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -