அட்டாளைச்சேனை ஊடகவியலாளர் றியாசுக்கு கொலை அச்சுறுத்தல்..!

அபு அலா -
நியு ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் தலைவரும் சுதந்திர ஊடகவியலாளருமான எம்.ஐ.எம்.றியாஸ் அதிபருக்கு அலைபேசி ஊடாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதுடன் தூசன வார்த்தைகளாலும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதென்று அக்கரைப்பற்று பொலிஸில் இன்று (11) காலை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருகையில், 

நேற்று முன்தினம் (09) ஆம் திகதி நியு ஸ்டார் விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்ட பாராட்டு நிகழ்வில் என்னை ஏன் கௌரவிக்கவில்லை, நான் இதற்கு தகுதியற்றவனா? வெளியிடங்களிலுள்ளவர்களை கௌரவிக்கும்போது என்னை மட்டும் ஏன் விட்டீர் என்று பல தகாத வார்த்தைப் பிரயோகங்களையும் பாவித்து இனி உன்னையையும், உனது ஊடகத்துறையையும் பார்க்கவுள்ளேன் என்று தூச வார்த்தைகளால் ஏசி திட்டித் தீர்த்து மிரட்டிய அலைபேசி அழைப்பு நேற்றிரவு (10) 8.33 மணியளவில் அட்டாளைச்சேனையிலிருந்து மக்கீன் என்று கூறி 077 677 0839 இலக்கத்திலிருந்து இந்த அச்சுருத்தல் விடுக்கப்பட்ட அழைப்பு வந்ததாகவும் இது தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸில் இன்று (11) காலை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த ஊடகவியலாளர் தெரிவித்தார். 

குறித்த அச்சுருத்தல் காரணமாக நியு ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் தலைவரும் சுதந்திர ஊடகவியலாளருமான எம்.ஐ.எம்.றியாஸ் அதிபர் இன்று (11) பாடசாலைக்கு செல்லவில்லை எனவும் இது விடயமாக அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.ஹசீமுக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதுதொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸார் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -