டெங்கு நோயினால் குழந்தை மரணிப்பதற்கு காரணமான பாதிப்படைந்த வடிகானுக்கு சிப்லி பாரூக்கினால் உடனடித் தீர்வு...

ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட்


காத்தான்குடி மீன்பிடி இலாகா வீதியில் அமைத்திருக்கின்ற வடிகான் பல வருட காலமாக மிகவும் மோசமான முறையில் பாதிப்படைந்து ஒழுங்கற்று இருப்பதனால் மழைநீர். கழிவு நீர் வடிந்தோட முடியாமல் நீர் தேங்கி நின்று சூழலையும் அப்பிரதேசத்தினையும் பாதிக்கின்றது மேலும் டெங்கு போன்ற பாரிய நோய்களை உண்டாக்க கூடிய நுளம்புகள் பரவக்கூடிய சூழ்நிலை காணப்படுகின்றமையினாலும், அந்த வடிகானையன்டி பல மலசலகூடங்கள் அமையப்பெற்று இருப்பதனால் மழைகாலங்களில் அதன் நீர் அனைத்து இடங்களிலும்பரவி நிலத்தடி நீரினை பாதிப்படையச் செய்வதுடன் பல்வேறு நோய்கள் உருவாகின்றது இவ்வாறு கடந்த வருடம் டெங்கு நோயினால் ஒரு குழந்தை மரணித்துள்ளது, மேலும் மழைகாலங்களில் வெள்ளம் ஏற்பட்டு மழைநீர் வீடுகளுக்குள் செல்கின்றது அத்துடன் பாம்புகள், பல்வேறு விஷஜந்துக்கள் வீடுகளில் நுழைவதனால் சிறுகுழந்தைகள், வயோதிபர்கள் போன்றோருக்கு மிகவும் அச்சுறுத்தலாக இருக்கின்றது இவ்வாறாக அப்பிரதேச மக்கள் பல்வேறு பதிப்புக்களுக்கு உள்ளாகியுள்ளனர், இதனை கருத்திற்கொண்டு அதனை சீர்செய்யும் முகமாக இன்று வியாழக்கிழமை (18.02.2016) கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்கள் மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதி பணிப்பாளர் திரு. ளு. இன்பராஜா அவர்களையும், நகரசபை செயலாளர் து. சர்வேஸ்வரன்இ மற்றும் உயரதிகாரிகள் பலரை உரிய இடத்திற்கு அழைத்து சென்று அங்குள்ள நிலைமைகளை காண்பித்ததுடன் அப்பிரதேச மக்களின் அவல நிலைகளையும் காண்பித்து வடிகானை விரைவாக சீர் செய்ய பணிப்புரைவிடுத்ததுடன் அதனை வடிவமைப்பதற்கான ஆலோசனைகளையும் வழங்கினார். 





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -