மகிந்த கட்சியில் இருந்து தூக்கப்படுவார்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினை பிளவுபடுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட்டமை நிரூபிக்கப்பட்டால் அவர் கட்சியிலிருந்து நீக்கப்படுவார் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுதந்திர கட்சியினை பிளவுபடுத்தும் நோக்கில் கட்சிக்கு முரணாக செயற்பட்டிருந்தால் அவர் கட்சியின் ஒழுக்காற்று குழு முன்னிலையில் விசாரணைக்கு அழைக்கப்படுவார் என்றும், இதன்போது அவர் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டால் தராதரம் பார்க்காமல் கட்சியின் உறுப்புரிமை பறிக்கப்படும் என்றும் கடும் தொனியில் குறிப்பிட்டார்.

அத்துடன் கட்சியின் ஒழுக்காற்று விடயத்தில் தராதரம் செல்வாக்கு செலுத்துவதில்லை என்றும் கட்சியின் எந்த ஒரு உறுப்பினரும் ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படலாம் என்றும் கூறினார்.

இந்த விடயம் குறித்து கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்ற போதிலும் அவற்றை பேச்சுவார்த்தைகளின் மூலம் உடன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்றும் தெரிவித்தார்.

மஹிந்த ராஜபக்ஷவாக இருந்தாலும் சரி வேறு ஒரு அங்கத்தவராக இருந்தாலும் சரி கட்சியின் விதிமுறைகளுக்கு அமையவே செயற்பட வேண்டும் என்றும் எவரேனும் அதனை மீறி செயற்பட்டால் அது யாராக இருந்தாலும் குற்றம் குற்றமே என்றும் கூறினார்.

எனவே, மஹிந்த ராஜபக்ஷ கட்சிக்கு விரோதமாக செயற்பட்டிருந்தால் அவரை கட்சி அங்கத்துவத்திலிருந்து நீக்கலாம் எனவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் துமிந்த திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.athavan 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -