மைத்திரியிடம் மாட்டிக்கொள்ளும் மஹிந்த - ஊழல் தொடர்பான அறிக்கையை கையளிக்க நடவடிக்கை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷயின் மோசடி தொடர்பான விசாரணை அறிக்கை, அடுத்த மாதத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறினேவிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது விளம்பரங்களுக்காக சுயாதீன தொலைக்காட்சி நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய 101 மில்லியன் ரூபாய்கள் நிலுவை தொடர்பில், பாரிய ஊழல்களுக்கு எதிரான ஜனாதிபதி ஆணைக்குழு இந்த அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளது.

குறித்த அறிக்கையின் நகல் ஒன்று சட்ட மா அதிபருக்கும் அனுப்பப்படும் என ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் லெஸ்லி டி சில்வா தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், குறித்த அறிக்கைக்கான இறுதி சாட்சியத்திரட்டுக்கள் எதிர்வரும் 25ஆம் 26ஆம் திகதிகளில் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -