உலகத்தின் விரல் விட்டு என்னக் கூடிய கோடிஸ்வரர்களில் ஒருவரான புரூணை சுல்தான் தனது சுய பாவனைக்காக ஏழாயிரம் கார்கள் பாவிக்கின்றாராம் அதில் 604 ரோல்ஸ் ரோய் கார்களாம் மற்றும் அவரின் மகளிடம் ஏர் பஸ் ஏ-320 விமானம் ஒன்று கூட இருக்கின்றதாம்
கோடீஸ்வரர் புரூனே சுல்தான் தனது நாட்டில் ஆடம்பர கார்களை வாங்கி குவிப்பதில் அவருக்கு நிகர் அவர் மட்டுமே எனலாம் எண்ணெய் வளமிக்க நாடான புரூனே 1967ல் தனி நாடானது அதன் மன்னராக ஹசனன் போக்கியா முயுசுதீன் வாதுலா இருந்து வருகிறார் எண்ணெய் வளத்தால் சொழிக்கும் அந்நாட்டில் சுல்தானின் வருமானத்திற்கு அளவே இல்லாமல் போய் விட்டது
சுல்தானின் ஒரு வினாடிக்குரிய வருமானம் 5277 ரூபாய் அதுவே ஒரு வாரத்திற்கு 3,191 கோடி ரூபாய் ஆகும் அவரது அரண்மனை இரண்டு லட்சம் சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது இங்கு 1,788 அறைகள் உள்ளன இதுதான் உலகிலுள்ள அரண்மனைகளிலேயே மிகப் பெரியது என்கிறார்கல் இங்கு 275 ஆடம்பர குளியலறைகள் உள்ளன அதில் உள்ள பொருட்கள் எல்லாம் தங்கம் மற்றும் வெள்ளியினால் செய்யப்பட்டவையாம் இவரது மகளுக்கு பதினெட்டு வயது நிரம்பியதும் நடத்தப்பட்ட பிறந்த நாள் கொண்டாட்டத்தில் சுல்தான் தனது மகளின் பிறந்த நாள் பரிசாக ஏர் பஸ் ஏ-320 விமானம் ஒன்றே வழங்கியிருந்தாராம் அவர் தனது சுய தேவைக்காக பயன்படுத்துவது போயிங் 747 விமானம் ஆகும்.
இதை எல்லாம் விட வித விதமான கார்களை வாங்கி குவிப்பதிலதான் மிகுந்த ஆர்வம் கொண்டவராம் சுல்தான் அரிடம் மொத்தமாக கிட்டத்தட்ட ஏழாயிரம் கார்கள் இருக்கின்றதாம் இவற்றின்மதிப்பு 2,312 கோடி ரூபாய் அவரிடம் உள்ள 7,000 கார்களில் அதிகளவில் இருப்பவை ரோல்ஸ்ராய்ஸ் கார்கள் தான் இவற்றின் எண்ணிக்கை மட்டுமே 604 இது தவிர, மெர்சிடீஸ் பென்ஸ்-574 பெராரி-452, ஆஸ்டின் மார்ட்டின்-300 பென்ட்லீ-382 பி.எம்.டபிள்யூ – 209 ஜாகு வார்-179 போர்ஷெய்-160 கோனிநெக்-134 லம்போர்க்கினி-21 மெக்லாரன் எப்1 ரகம்-8 பியூஜோ-5 ஷெல்பி சூப்பர் 1 ஆகியவை குறிப்பிடத்தக்க பிரபல மாடல் கார்கள் ஆகும்.
இந்த அதிக விலை யுள்ள ஆடம்பர கார் களை தவிர, மேலும் நான்காயிரம் வெவ்வேறு நிறுவன கார்களும் அவருக்கு சொந்தமாக உள்ளன இவ்வளவு கார்களையும் அவரது அரண்மனை அருகே உள்ள விமான நிலையத்தின் ஒரு மூலை யில்தான் நிறுத்தி வைத்துள்ளார் புரூணை சுல்தான் கார்கள் நிறுத்தப் படும் பார்க்கிங் ஏரியாவுக்கும் கார் நிறுவனங்களின் பெயர்களையே அவர் சூட்டி உள்ளாராம்
அவற்றை பராமறிப்பதற்கென தனித்தனியே வாகன திருத்துனர்களையும் வைத்துள்ளார் அவர்களுக்கு உணவு உறைவிடம் கை கொள்ள முடியாத அளவுக்கு சம்பளமும் வழங்கி வருகிறார் அதில் குறிப்பிட்ட சில கார் மெக்கானிக்களுக்கு ஆண்டுக்கு ஒரு கோடியே பதினைந்து இலட்ச ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிறது உலகில் மிக முக்கிய கார் தயாரிப்பு நிறுவனங்களின் அனைத்து பிரபல கார்களும் அவரிடம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதில் சில குறிப்பிட்ட மாடல்கள் அவரது விருப்பத்திற்கேற்ப கார் நிறுவனங்களினால் தயாரித்து அளித்தவை என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்
தகவல்: வை.எம்.பைரூஸ்-
