ராஜபக்க்ஷைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை...?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படாமைக்கான காரணங்கள் குறித்து ஆராயப்பட உள்ளது.

மஹிந்த ராஜபக்ச அவரது பாரியார் சிராந்தி ராஜபக்ச முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச உள்ளிட்டவர்களுக்கு எதிராக அண்மையில் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன. 

இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஏன் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது குறித்து ஆராயப்பட உள்ளது.

எதிர்வரும் வாரங்களில் இது குறித்து அரசாங்கத்தினால் உயர்மட்டப் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக அரசாங்கத்தின் சிரேஸ்ட அமைச்சர் ஒருவர் சிங்கள வார இதழ் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளர்.

சட்ட நடவடிக்கை எடுக்கப்படாமை குறித்து அரசாங்கத்தை ஆட்சியில் அமர்த்த ஒத்துழைப்பு வழங்கிய சிவில் அமைப்புக்கள் மற்றும் ஏனைய தரப்புக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து ஆளும் கட்சியின் அமைச்சர்கள் சிலரும் ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்த தீர்மானித்துள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஆகியோருக்கு எதிரான விசாரணைகள் பூர்த்தியாகியுள்ளதாகவும் விசாரணைகளின் அடிப்படையில் சட்ட நடவடிக்கை எடுப்பதே எஞ்சியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -