இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக, கல்முனை பயிற்சி நிலையத்துக்கு பூட்டு..!

எம்.வை.அமீர்-
ண்மைக்காலமாக கல்முனையில் இயங்கிவந்த வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக பயிற்சி நிலையத்தை வேறு இடத்துக்கு கொண்டு செல்வதற்கான முனைப்புகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த நிலையில்,

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றவூப் ஹக்கீம் தலைமையில் பிரதி அமைச்சர்களான பைசல் காசிம், எச்.எம்.எம்.ஹரீஸ், பாராளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஐ.எம்.மன்சூர், எம்.எஸ்.தௌபீக் ஆகியோர், 

பாராளுமன்ற கட்டிட தொகுதியில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரளையுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த அமைச்சர் தலதா அத்துகோரளை, போதிய இடவசதி இன்மை காரணமாகவே கல்முனையிலிருந்து குறித்த பணியகத்தை இடமாற்ற தீர்மானித்ததாக கூறியதாகவும்,

இதற்கு பதிலளித்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், கல்முனை கரையோரப் பிரதேசத்தில் போதுமான இடவசதியுடன் கூடிய இடத்தை தான் பெற்றுத்தருவதாக உறுதிமொழி வழங்கியதை தொடர்ந்து கல்முனையிலிருந்து வெளிநாட்டு வேலைவாய்ப்புபணியகம் இடமாற்றுவது தொடர்பான திட்டம் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்த நிலையில்,

இன்று (2016-02-10) ஆம் திகதி கல்முனை பணியகத்தில் இருந்து பொருட்களை ஏற்றிச்செல்ல வந்த லொறியையும் சேர்த்து பணியகத்துக்கு இனம்தெரியாதோர் பூட்டு இட்டுள்ளதாக அறிய முடிகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -