சாய்ந்தமருதில் "RIO HOME"பிரமாண்ட திறப்புவிழா!கிழக்கிலங்கை சாய்ந்தமருதில் தளபாடங்கள், மின்விளக்குகள், கடிகாரங்கள், வாசனைத்திரவியங்கள், சமயலறை மற்றும் குளியலறை பொருட்கள், அத்துடன் வீடுகளுக்கு தேவையான அனைத்துவிதமான பொருட்கள், அலுவலகத்திற்குத் தேவையான அனைத்துவிதமான தளபாடப் பொருட்களையும் இக்காலத்திலத்திற்கு ஏற்றாற்போல் நவீன ரகத்தில், உயர்தரத்தில் உத்தரவாதத்துடனும் நியாயமான விலையிலும் ஒரே கூரையின் கீழ் பெற்றுக்கொள்ளக் கூடியவாறு இன்று (21-04-2024 ஞாயிறு) உதயமாகியது "RIO HOME".

நான்கு அடுக்குமாடிகள் கொண்ட குளிர்ச்சியான மாபெரும் காட்சியறை, அதன் உரிமையாளர் நெய்னா முகம்மட் றிஸ்மிர் அவர்களின் பங்குபற்றுதலுடன் வாடிக்கையாளர்கள் பெரியோர்கள் புடைசூழ றிஸ்மிர் அவர்களது தந்தையார் நைனார் முஹம்மது மற்றும் தாயார் பதூர் ஜஹான் ஆகியோர்களால் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வின்போது அஷ்செய்க் எம்.ஐ. ஆதம்பாவா (ரசாதி) அவர்கள் விஷேட துஆ பிராத்தனை நிகழ்த்தினார். இங்கு சாய்ந்தமருது மாளிகைக்காடு வர்த்தக சங்கத்தின் தலைவரும் முபாறக் டெக்ஸ் டைல்ஸ் குழுமத்தின் உரிமையாளருமான அல் ஹாஜ் எம்.எஸ். எம். முபாறக், உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்களையும் தங்களது ஆலோசனைகளையும் தெரிவித்தனர்.

பிரதான வீதி, சாய்ந்தமருதில் திறக்கப்பட்ட பிரமாண்ட காட்சியறையில் இன்று கொள்வனவு செய்யப்பட்ட பொருட்களுக்கு அதிரடி விலைக்கழிவுகள் மற்றும் பெறுமதிமிக்க அன்பளிப்புகளும் வழங்கப்பட்டது விஷேட அம்சமாகும்.

நிகழ்வில் திகாமடுல்ல மாவட்டத்தின் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காண்கிறஸின் பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காஸீம் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் உள்ளிட்ட பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக் முன்னாள் பிரதேச செயலாளர் ஏ.எல்.எம். சலீம், பொறியலாளர்களான எம்.எம். நஸீர், ஏ.எம்.சாஹிர், டொக்டர் சனூஸ் காரியப்பர், உலமாக்கள், சாய்ந்தமருது மற்றும் கல்முனை நகர பள்ளிவாசல்களின் தலைவர்கள், கல்முனை மற்றும் சாய்ந்தமருது வர்த்தக பிரமுகர்கள், பாடசாலைகளின் அதிபர்கள் ஆசிரியர்கள் மற்றும் றிஸ்மிர் அவர்களது குடும்ப உறவினர்கள் நண்பர்கள் வாடிக்கையாளர்கள் என பலரும் பங்கு கொண்டிருந்தனர். 


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :