ஞானசார தேரருக்கு நீதிபதியின் சாட்டை அடி...!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஞானசார தேரரின் வழக்கை விசாரித்த நீதிபதி ரங்க திசானாயக்க ஞானசார தேரருக்கு கடும் தொனியில் சில அறிவுருத்தல்களை வழங்கியுள்ளார்.

ஞானசார தேரர் சார்பாக ஆஜாரான வழக்கரிஞரிடம் சந்தேக நபர் (ஞானசாரர்) பிணை கோருகிறாரா என நீதிபதி கேட்டுள்ளார்.

ஆம் என ஞானாசார தேரரின் வழக்கறிஞர் பதில் வழங்க 

எங்களை கைது செய்து உள்ளே போடுங்கள் என கூச்சல் போட்டவர்களுக்கு இப்போது எதற்கு பிணை அவர் கேட்பதற்காக என்னால் பிணை வழங்க முடியாது சட்டத்தில் இடமிருந்தால் பிணை வழங்குவேன்.

சந்தேகனபரின் முன்னைய செயற்பாடுகளை பார்த்தால் ஏதோ ஒன்றை அடைவதற்காக திட்டமிட்டு நீதிமன்றை அவமதித்தது போல தெரிகிறது.

யாரினதும் தனிப்பட்ட விடயங்களை அடைந்துகொள்ள நீதிமன்றை பயன்படுத்த இடமளிக்க முடியாது , அப்படி எவரும் செயற்பட முற்பட்டால் கடுமயான தண்டனைகளை சந்திக்க நேரிடும் என நேற்று ஞானசார தேரரின் வழக்கை விசாரித்த நீதிபதி திட்டவட்டமாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வழக்கு விடயம் தொடர்பாகவும் நீதிமன்ற செயற்பாடுகள் தொடர்பாக ஞானசார தேரருக்கு ஊடகங்களுக்கு கருத்து கூற நீதிபதி கட்டுப்பாடு விதித்திருந்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -