ஹஜ் யாத்திரை முகவர்களின் மோசடிகளைத் தடுக்க புதிய விசாரணைக்குழு நியமனம்..!

இக்பால் அலி-
ஜ் யாத்திரைகளின் போது முகவர்களினால் இடம்பெறும் மோசடிகளைத் தடுப்பதற்காகவும் ஹஜ் யாதிரையாளர்களுக்கு சிறந்த வசதி வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்குடன் முஸ்லிம் சமய கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீமின் பணிப்புரைக்கு இணங்க புதிதாக விசாரணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சின் அந்தரங்கச் செயலாளர் எம்.எச்.ஏ.பாஹிம் தெரிவித்தர்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

இந்த புதிய விசாரணைக் குழு சுயமாகவும் சுதந்திரமாகவும் சுயாதீனமாகவும் செயற்படவுள்ளது. இந்த விசாரணைக் குழுவுக்கு ஹஜ் குழுவினர்களுடைய தலையீடோ அல்லது அமைச்சருடைய எந்த தலையீடோ அல்லது வேறு எந்த அரசியல் தலையிடுகளோ இடம்பெறாது. 

விசாரணைக்குழு சுயதீனமாக செயற்படுவதற்கு முழு அங்கீகாரமும் வழங்கப்பட்டுள்ளது. ஹஜ் முகவர்கள் தொடர்பாக பொது மக்களினால் முன்வைக்கப்படும் குற்றச் சாட்டுக்கள் பரிசீலனை செய்து நிரூபிக்கப்படும் பட்சத்தில் முகவருக்குரிய அனுமதிப் பத்திரம் ரத்துச் செய்யப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார். 

இதற்காக தகைமை வாய்ந்த குழுவினர் நீதிபதி அப்துல் வாஹிட் அப்துல் சலாம் தலைமையில நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்தக் குழுவில் சட்டத்தரணி அஹமட் நத்வீ பதுர்தீன், நகர அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளர் எம்.எச்.முயினுடீன் ஆகி இருவரும் செயற்குழு உறுப்பினராகவும் இஸ்மாயீல் ரபீக் செயலாளராகவும் நிமயமிக்கப்பட்டுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார். 

இந்தக் குழுவினருடன் ஹஜ் குழுவின் தலைவர் கலாநிதி சியாட் தாஹா, சட்டத்தரணி முஹமட் யாசீன், சட்டத்தரணி சிறாஜ் நூர்தீன், அமைச்சரின் அந்தரங்கச் செயலாளர் எம் எச்.ஏ.பாஹீம் உள்ளிட்டவர்கள் இங்கு படங்களில் காணலாம்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -