கடந்த யுத்த காலத்தில் இடம்பெயர்ந்த யாழ் மாவட்ட முஸ்லிம் மக்களை இன்றைய தினம் (21) பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் சட்டத்தரணி எம்.எஸ்.எஸ்.அமீர் அலி சந்தித்துள்ளார்.
இச்சந்திப்பு யாழ் ஒஸ்மானியா கல்லூரியின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது. இதன் போது அம்மக்களின் மீள்குடியேற்றம் பற்றிய பல்வேறுபட்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.
இக் கலந்துரையாடலில் யாழ் மாவட்ட அ.இ.ம.கா இன் அமைப்பாளர் அமீன் ஹாஜியார் யாழ் பணிமனை தலைவரும் யாழ் முன்னாள் மாநகர சபை உறுப்பினருமான சுபியான் மெளலவி கிளி மாவட்ட சம்மேளனத்தலைவர் ஜமால்தீன் உபதலைவர் கே.எம்.நிலாம் செயலாளர் சுவர்கான் யாழ்-கிளிநொச்சி ஜம்மியத்துல் உலமா தலைவர் மெளலவி அப்துல் அஸீஸ் யாழ் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் சரபுல் அனாம் மற்றும் ஊர்ப்பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள்.
அத்துடன் யாழ் மாவட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் பற்றிய ஆரம்ப கட்ட கலந்துரையாடல் ஒன்று யாழ் மாவட்ட அ.இ.ம.கா இன் அமைப்பாளர் அமீன் ஹாஜியாரின் வீட்டில் நடைபெற்றது.இதில் பல விடயங்கள் ஆராயப்பட்டன.
அடுத்து யாழ் மாவட்ட சாவகச்சேரி முஸ்லிம் பிரமுகர்களை சாவகச்சேரி பள்ளிவாசலில் வைத்து பிரதி அமைச்சர் சட்டத்தரணி சந்தித்துள்ளார்.
இச் சந்திப்பில் சாவகச்சேரி மக்களின் மீள்குடியேற்றம் பற்றிய பல்வேறுபட்ட விடயங்கள் ஆராயப்பட்டன.
இந்தக்கலந்துரையாடலில் யாழ் மாவட்ட அ.இ.ம.கா இன் அமைப்பாளர் அமீன் ஹாஜியார் கிளி மாவட்ட சம்மேளனத்தலைவர் ஜமால்தீன் ஹாஜியார் யாழ் பணிமனை தலைவரும் யாழ் முன்னாள் மாநகர சபை உறுப்பினருமான சுபியான் மெளலவி யாழ் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் சரபுல் அனாம் சாவகச்சேரி ஹனீபா ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.



