முஹம்மட் ஹனீபா-
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனப் பொதுக் கூட்டம் இன்று (21) சாய்ந்தமருது சீ.பிரீஸ் மண்டபத்தில் கலாபூசணம் மீரா எஸ்.இஸ்ஸடீன் தலைமையில் நடைபெற்றது.
இந்த வைபவத்தில் அமைப்பின் கடந்த கால செயற்பாடுகள் மற்றும் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டன.
அத்துடன் அமைப்பின் தலைவர் மீரா இஸ்ஸதீன் இங்கு உரையாற்றுகையில்
எமது அமைப்பு ஊடகவியலாளர்களின் நலன்களில் பலதரப்பட்ட வகையில் பல்வேறு உதவிகளையும் நலன்களையும் செயற்படுத்தி வந்துள்ளது. எதிர்காலத்திலும் கடந்த காலங்களை விட ஊடகவியலாளர்களின் நலன் பேனும் விடயத்தில் கூடுதலான அக்கரையுடனும் செயற்பட வேண்டியுள்ளது.
புதிதாக தெரிவு செய்யப்படுகின்ற நிர்வாக குழு கூடுதலாக எமது உறுப்பினர்களின் நலன்களில் அக்கரையுடன் செயற்பட வேண்டும் எனவும் பொது அமைப்புக்களை வழிநடாத்துகின்ற போது பலதரப்பட்ட சவால்களையும் எதிர்ப்புக்களையும் சந்திக்க வேண்டிய நிலை தோன்றும் அவற்றை கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இன்றைய நிகழ்விற்கான அனுசரனையினை எயார் கிங்ஸ் நிறுவனம் வழங்கியமை குறிப்பிடத்தக்கதாகும்.
அதனை தொடர்ந்து 2016ம் ஆண்டுக்கான நிர்வாகிகள் தெரிவு செய்யப்படட்னர்.
விபரம் பின்வருமாறு
01. தலைவர் - கலாபூசணம் மீரா எஸ்.இஸ்ஸடீன்
02. செயலாளர் - எஸ்.எல்.அஸீஸ்
03. பொருலாளர்; - யு.எம்.இஸ்ஹாக்
04. உப - தலைவர்கள் - எ.எல்.எம். சலீம், எம்.ஐ.எம்.ஆரிப்
05. உப - செயலாளர் - ஆர்.தில்லைநாயகம்
06. கணக்காய்வாளர்; - யூ.கே. கால்டீன்
செயற்குழு உறுப்பினர்கள் விபரம்;
பி.எம்.எம்.எ.காதர்,
யு.சம்சுத்தீன்,
எஸ்.எல்.எம்.பிக்கீர்,
ஏ.ஜே.எம்.ஹனீபா,
எஸ்.கார்த்திகேசு,
எ.எல்.எ.றபீக் பிர்தௌஸ்,
ரி.கே.றகுமாத்துல்லாஹ்,
ஐ.எ.சிராஜ்,
எ.எஸ்.எம்.முஜாஹித்
எம்.எல்.சரீப்டீன்


