புகழ்பெற்ற தமிழக எழுத்தாளரும் கவிஞருமான நிஷா மன்சூர் எழுதிய 'நிழலில் படரும் இருள்' என்ற கவிதை நூலின் அறிமுக விழா எதிர்வரும் 27 02 2016 சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு மாளிகாகந்த வீதி மருதானையில் அமைந்துள்ள AMYS மண்டபத்தில் இடம்பெறற உள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும் நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான அல்ஹாஜ் என்.எம் அமீன தலைமையில் இடம்பெற உள்ள நிகழ்வில் விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் எச்.எம்.எம் ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்துகொள்ள உள்ளார். புரவலர் ஹாஷிம் ஓமர் முதல் பிரதியை பெற்றுக்கொள்ள உள்ளார். முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளருமான பஷீர் செய்குதவூத் அவர்கள் கௌரவ அதிதியாக கலந்துகொள்வார்.
