ஊடகவியலாளர் கொலை விவகாரம்: கிரித்தலே இராணுவப் புலனாய்வு முகாமுக்கு சீல்

கிரித்தலே இராணுவப் புலனாய்வு முகாம் சீல் வைத்து மூடப்பட்டுள்ளது. இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வாவின் பணிப்புரைக்கு அமைய நேற்று இந்த முகாம் சீல் வைத்து மூடப்பட்டது.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போதல் சம்பவம் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவினை இராணுவத் தளபதி ஏற்றுக் கொள்ளத் தவறினால் அவருக்கு எதிராக வழக்குத் தொடருமாறு ஹோமாகம நீதவான், புலனாய்வுப் பிரிவினருக்கு அறிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பினைத் தொடர்ந்து கிரித்தலே முகாம் மூடப்பட்டுள்ளது.

கிரித்தலே புலனாய்வு முகாமில் கடமையாற்றி வந்த இராணுவப் புலனாய்வு உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய அதிகாரிகள் முகாமின் பணிகளிலிருந்து விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளனர்.

முகாமின் பொறுப்பு மின்னேரியாவிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட இராணுவ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கொழும்பிலிருந்து விசேட விசாரணைக் குழுவொன்று முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விசாரணைளுக்காக இராணுவ பொலிஸ் பிரிவு மற்றும் இராணுவத்தின் சட்டப் பிரிவு குழுவொன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கிரித்தலே முகாமின் ஆவணங்களை சோதனையிட்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு விசாரணைக் குழுவிற்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

2009ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரையில் கிரித்தலே முகாமில் கடமையாற்றிய அனைத்து உத்தியோகத்தர்கள் அதிகாரிகளும் வாக்குமூலங்களை அளிக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.

இராணுவ வரலாற்றில் இவ்வாறான ஓர் சம்பவம் முதல் தடவையாக இடம்பெற்றுள்ளது. மிலேனியம் சிட்டி சம்பவத்தின் போது கூட இராணுவ முகாம் சீல் வைத்து மூடப்படவில்லை என சிரேஸ்ட இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நடவடிக்கையானது தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையக் கூடுமென குறிப்பிட்டுள்ளனர். புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்கள் உள ரீதியாக பாதிக்கப்படக் கூடுமென தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -