வீடியோ -கல்முனை மாநகர அலுவலகத்தில் பொது மக்களை அசிங்கமாக ஏசி விரட்டும் உத்தியோகத்தர்கள்..!

நேற்று (05.01.2016) கல்முனை மாநகர நிர்வாக காரியாலயத்திற்கு வியாபார அனுமதிப்பத்திரம் புதுப்பித்தல் மற்றும் சோலை வரி பணம் செலுத்துவதற்காக வந்த பொது மக்களிடம் அநாகரிகமாக நடந்து கொண்டனர்.

கல்முனை மாநகர மேயரின் அலுவலகத்துக்கு தமது தேவைகளை நிறைவேற்ற வரும் பொது மக்களிடம் அங்கு பனியாற்றும் உத்தியோகத்தர்களில் சிலர் மிகவும் மோசமாக நடந்துகொள்வது வழமை. இதனை கல்முனை மேயர் மற்றும் ஆனையாளர் கண்டும் கானாமலும் இருப்பது மிகவும் மன வருத்ததிற்குரிய விடயம்.

நேற்று காலை முதல் பிற்பகல் 3:00 மணி வரை சோலைவரி மற்றும் வியாபார நிலையங்களுக்கான அனுமதிப்பத்திரத்தினை புதுப்பித்தலுக்காக பொது மக்கள் அங்கு நிறைந்து காணப்பட்டனர். ஆனால் அங்கு கடைமையில் இருக்க வேண்டிய ஒரு சில உத்தியோகத்தர்கள் அங்கு இருக்கவில்லை அவர்கள் தமது சொந்த தேவைகளுக்காக வெளியில் சென்று பிற்பகல் வேளை வரை வருகை தரவில்லை இதனால் அவர்களை எதிர்பார்த்து காத்திருந்த பொதுமக்கள் ஆவேசத்துடன் சத்தமிட்டனர்.

அந்த வேளையில் அங்கு வருகை தந்த கல்முனை முக்கிய நபரின் உதவியாளர் என அறியப்படும் நபரும் இன்னும் சிலரும் பொது மக்களை நோக்கி நாங்கள் நிணைக்கும் நேரத்தில்தான் உங்கள் வேலைகள் நடக்கும், நீங்கள் நிணைக்கும் நேரத்தில் வேலை செய்ய முடியாது எனவும் மேலும் சில அசிங்கமான வார்த்தைப் பிரயோகங்களையும் பாவித்தனர், இதனால் பொது மக்களுக்கும் குறித்த நபருக்கும் இடையில் கடுமையான வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

இறுதியாக குறித்த  நபரும் அங்கு வேலை செய்யும் சிலரும் கூறினார்கள், நாங்கள் நினைத்தால் உங்கள் வியாபார நிலையத்துக்கான அனுமதியை ரத்துச் செய்து இனிமேல் வியாபாரம் செய்யவிடமாட்டோம் என பொது மக்களை அச்சுறுத்தினர் .

இந்த அமளிதுமழி நடந்துகொண்டிருக்கும் போது அங்கிருந்த பொது மக்களில் சிலர் இதனை வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்தனர்.

அப்படி வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்தவர்களிடம் அதனை அழித்துவிடுமாறும் இல்லையென்றால் உங்களுக்கு மிகவும் மோசமான பின் விளைவுகள் ஏற்படும் எனவும் குறித்த நபர் எச்சரிக்கை விடுத்ததுடன் அவர்களை மிகவும் மோசமான வார்த்தைப்பிரயோகங்களினால் திட்டினார்.

இந்த பிரச்சினை காரணமாக நேற்று கல்முனை மாநகர நிர்வாக மேயர் அலுவலகத்திற்க்கு தமது தேவைகளை நிறைவேற்ற வந்தவர்களின் வேலை எதனையும் நிறைவேற்றி தரமாட்டோம் எனவும் இன்னும் பல நாட்களுக்கு உங்களை அலைய விடுவோம் எனவும் அங்கிருந்த சில அதிகாரிகளும் குறித்த நபரும் பொது மக்களிடம் கூறினர்.

இது விடயம் சம்மந்தமாக சம்மந்தப்பட்ட உயரதிகாரிகள் தொடர்புடைய உத்தியோகத்தர்களுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்குமாறும் தவறும் பட்சத்தில் தொடர்புடைய வீடியோ மற்றும் புகைப்படங்களுடன் சம்மந்தப்பட்ட அமைச்சுக்களில் முறையிடப்படும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுகின்றனர்.

தகவல்: அ.றியால், 
சாய்ந்தமருது.
(சம்பவத்தை நேரில் கண்டவரில் ஒருவர்)




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -