நீதிமன்றில் சத்தமிட்டவருக்கு ஒன்றறை வருட சிறைதண்டனை...!

எப்.முபாரக்-
திருகோணமலை மூதூர் நீதிமன்றில் பொலிஸாரைத் தூற்றியதோடு நீதிமன்றினுள் சத்தம் இட்ட நபர் ஒருவருக்கு ஒன்றரை வருட கட்டாய சிறைதண்டனை விதித்து மூதூர் நீதிமன்ற நீதிவான் ஐ.என்.றிஸ்வான் செவ்வாய்கிழமை(12) தீர்ப்பளித்தார். 

கிண்ணியா பைசல் நகர் பகுதியைச் சேர்ந்த ஏ.ஆர்.அப்துல் முனீஸ் வயது (33) என்பவருக்கே அத்சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மற்றும் கிண்ணியா,மூதூர் பகுதிகளில் கடைகளை உடைத்து கொள்ளையிட்ட குற்றச்சாட்டு வழக்குகளின் திருகோணமலை சிறைச்சாலையில் விளக்கமறியல் கைதியாக இருந்த நிலையில் குறித்த நபருக்கு மூதூர் நீதிமன்றில் நடைபெற்று வந்த வழக்கென்றிற்கு அழைத்துச் சென்ற போதே இவ்வாறு நீதிமன்றில் பொலிஸாருக்கு அவதூராக பேசியதோடு நீதிமன்றில் சத்தம்மிட்ட குற்றச்சாட்டுக்கு குறித்த நபருக்கு குறித்த தீர்ப்பினை அளித்து நீதிவான் தீர்ப்பளித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -