வசீம் தாஜுடீனின் கொலை தொடர்பில் இல்லை என்ற தரவுகளை, ஒப்படைத்தது தொலைபேசி சேவை.!

பிரபல ரக்பீ வீரர் வசீம் தாஜுடீனின் தொலைபேசி கலந்துரையாடல் ஆதாரங்களை இரகசிய பொலிஸார் நீதிமன்றதத்தில் சமர்பிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கு முன்னர் தொலைபேசி கலந்துரையாடலுக்கான தரவுகள் தங்களிடம் இல்லை என்று தெரிவித்திருந்த தொலைபேசி சேவை வழங்கும் தனியார் நிறுவனம், அண்மையில் அதற்கான தரவுகள் அனைத்தையும் விசாரணை நடத்தும் பிரிவினரிடம் ஒப்படைத்தது.

குறித்த தரவுகள் மூலம் கொலையுடன் தொடர்புடைய பாதுகாப்பு அதிகாரிகளுக்கும், அதனுடன் சம்பந்தப்பட்ட முன்னாள் அரசாங்கத்தின் உயர்பீட நபர் ஒருவருக்கும் இடையே சம்பவ தினத்தன்று தொலைபேசி கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிகின்றன.

இதுவொரு விபத்து என முன்னர் கூறப்பட்டிருந்த போதிலும், இது திட்டமிடப்பட்ட ஒரு கொலை என்று நீதிமன்றத்தில் தெரிவித்த இரகசிய பொலிஸார், அதற்கான பாதுகாப்பு கமராக்களினால் பதிவாகிய காணொளி ஆதாரங்களையும் சமர்பித்திருந்தனர்.

இந்த காணொளிகளை வெளிநாட்டிற்கு எடுத்துச்சென்று, ஆய்வு நடத்துவதற்கான அனுமதியை நீதிமன்றம் வழங்கியுள்ளது.

இந்த நிலையிலேயே தற்போது தொலைபேசி கலந்துரையாடல் ஆதாரங்களும் இரகசிய பொலிஸாரிடம் சிக்கியுள்ளன
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -