திருகோணமலை முகத்துவாரம் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலி...!

எப்.முபாரக்-
திருகோணமலை - சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இலங்கை முகத்துவாரம் பகுதியில் முச்சக்கர வண்டியுடன் மோட்டார் சைக்கிள் ஒன்று இன்று சனிக்கிழமை (16) மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.

வெருகல் - முட்டிச்சேனை பகுதியைச் சேர்ந்த ஜோபாலசிங்கம் வசந்தன் (19 வயது ) என்பவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்தநபர், மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்று கொண்டிருந்தபோது வேகத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையில் முச்சக்கர வண்டியுடன் மோதியதாக, பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது

பிரேத பரிசோதனைக்காக சடலம், திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -