ACMC இன் பேராளர் மாநாட்டை அம்பாரை மாவட்ட போராளிகள் பகிஸ்கரிக்க வேண்டும் - சுபைர் MPC

எஸ்.அஷ்ரப்கான், றியாஸ் ஆதம்-
கில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் உயர்பீட உறுப்பினர்கள், போராளிகளுக்கு அறிவிக்கப்படாத பேராளர் மாநாட்டை அம்பாரை மாவட்ட போராளிகளும், முக்கியஸ்தர்களும் பகிஸ்கரிக்க வேண்டும் என்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். சுபைர் தெரிவித்துள்ளார்.

இது விடயமாக அவர் மேலும் குறிப்பிடும்போது,

அன்மைய பொதுத் தேர்தலில் 33 ஆயிரம் வாக்குகள் வழங்கிய மற்றும் ஆதரவு வழங்கிய பெருந்தகைகள் இங்குள்ள மக்களை அமைச்சர் றிஷாட் பதியுதீன் ஏமாற்றியுள்ளார். 

தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான அம்பாறை மாவட்டத்திற்கு தேசியப்பட்டியல் எம்.பி.தருவோம் என்ற விடயம் நிராகரிக்கப்பட்டமை, கட்சியின் உருவாக்கத்திற்கு காரண கர்த்தாவான, மறைந்த தலைவர் மர்ஹூம் அஷ்ரபுடன் இருந்து அரசியல் அனுபவம் பெற்ற இக்கட்சியின் செயலாளர் நாயகத்தை அவமானப்படுத்தும் வகையில் இடை நிறுத்தியுள்ளோம் என கொழும்பில் கூடி சட்ட விரோதமாக முடிவெடுத்தமை, மற்றும் எம்.பி. பதவியை வழங்க மறுத்தமை போன்ற பல காரணங்களினால் அம்பாறை மாவட்ட மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். 

எனவேதான் அங்குள்ள பலரும் இது விடயமாக எனக்கு அறிவித்த வண்ணம் தமது இதயக் குமுறல்களை வெளிப்படுத்தி வருகின்றமையால் இந்த சிறுபிள்ளைத் தனமான பேராளர் மாநாட்டை அம்பாரை மாவட்ட மக்கள் மட்டுமல்லாது முழு இலங்கையிலும் இருக்கும் கட்சியின் போராளிகள், ஏமாற்றப்பட்டுள்ள உயர்பீட உறுப்பினர்கள் அனைவரும் இந்த பேராளர் மாநாட்டை பகிஸ்கரிக்குமாறு வேண்டகோள் விடுக்கின்றேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -